Friday, March 21, 2014

ஜும்ஆத் தொழுகை

ஜும்மாத் தொழுகையும் ஐவேளைத் தொழுகையைப் போன்றே கட்டாயக் கடமையாகும். இது லுஹர் தொழுகைக்கு பதிலாக தொழப்படும் தொழுகையாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.(அல்குர்ஆன் 62:9)
வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜும்ஆத் தொழுகையில் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தக்க காரணமின்றி கலந்து கொள்ளத் தவறியவரை நபி (ஸல்) கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
யாரையேனும் ஜும்ஆத் தொழுகை நடத்துமாறு நியமித்து விட்டு ஜும்ஆத் தொழுகைக்கு வராது வீட்டிலிருப்பரின் வீடுகளுக்குத் தீ வைத்துக் கொளுத்த வேண்டுமென நாடுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி) நூற்கள்;: அஹ்மது, முஸ்லிம்)
ஜும்ஆவும் அதானும்
ஜும்ஆவுக்கு ஒரே ஒரு பாங்கு தான் கூறவேண்டும். நபி(ஸல்) , அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் ஒரே ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டது. உத்மான் (ரலி) காலத்தில் ஆட்சி விரிவடைந்ததால் மக்களை நினைவூட்டு வதற்காக கடைத்தெருவில் (அதான்) அழைப்பு விடுக்கப்பட்டது. அதான் என்பதற்கு பாங்கு என்று பொருளிருப்பது போன்றே பிரகடனம் செய்தல், அறிவித்தல் என்ற பொருளும் உண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 7:44, 9:3, 22:27) இங்கே கடைத்தெருவில் அதான் சொன்னதாக வருவதால் நிச்சயம் அறிவிப்பு என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இரு குத்பாக்கள்
நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சொற்பொழிவு நிகழ்த்துவார்கள.; பின்னர் உட்கார்ந்து விட்டு மீண்டும் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். இரண்டுக்குமிடையே அமர்வார்கள். (அந்தச் சொற்பொழிவில்) குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். மக்களுக்கு (நெறியூட்டும்) போதனை செய்வார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமூரா(ரலி) நூல்: முஸ்லிம் )
நாயகத் தோழர் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தியபோது சுருக்கமாகவும், இலக்கிய நயத்துடனும் சொற்பொழிவு ஆற்றினார்கள். அவர்கள் (மிம்பர்; மேடையிலிருந்து ) இறங்கியதும் தாங்கள் சுருக்கமாக சொற்பொழிவு நிகழ்த்தி;விட்டீர்களே! கொஞ்கம் விரிவாகச் செய்திருக்கக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், நீண்ட தொழுகையும் சுருக்கமான சொற்பொழிவும் (மயின்னத்துன் மின் ஃபிக்ஹிஹி) மனிதனின் அறிவுக்கு சான்றாகும். எனவே தொழுகையை நீட்டுங்கள்! சொற்பொழிவைச் சுருக்குங்கள்.
قال صلي الله عليه وسلم : ان في البيان لسحرا 
(இன்னஃபில் பயானி லஸிஹ்ரா) நிச்சயமாக பயானில் (சொற்பொழிவில் பிறரை வயப்படுத்தும்) ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூவாயில், நூல்: முஸ்லிம்)
இந்த நபி மொழிகளிலிருந்து சொற்பொழிவின் நோக்கமே மக்களுக்கு போதனை செய்வதும் அவர்களின் உள்ளங்களை ஈர்ப்பதுமாகும். அவர்களுக்கு புரியாத மொழியில் நீண்ட உரை நிகழ்த்தி தூங்க வைப்பதல்ல என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம்.
குத்பா (சொற்பொழிவு) உரையைக் கேட்பது
இரு ரகஅத்துகளுக்குப் பதிலாக ஓதப்படும் ஜும்ஆ குத்பாக்களை (சொற்பொழிவுகளை) கேட்பதும் அவசியமாகும். இதில் மார்க்க நெறிமுறைகளையும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும், ஐயங்களையும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை மக்களுக்குப் புரியும் வகையில் ஆற்றப்பட வேண்டும். அந்த வகையில் ஜும்ஆ உரை அமையவேண்டும்.
புரியும் மொழியில் குத்பா உரை 
இன்று அதை ஒரு மந்திரமாக ஜபிக்கப்படுவதையும், சம்பிரதாயமாக ஓதப்படுவதையும்;, இராகமாகத் தாலாட்டுப் பாடுவதையும் பார்க்கிறோம். இந்தச் சொற்பொழிவு ஒவ்வொருவருக்கும் பயன்பட வேண்டுமாயின் அவரவர் மொழியிலேயே நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இரு குத்பாக்களுக்கு பதில் மூன்று குத்பாக்கள் 
நம்மில் சிலர் குத்பா பேருரையில் கலந்து கொள்ளாது வெறும் தொழுகையில் கலந்து கொள்ளும் அவல நிலையையும் இன்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. இதற்கு நம் நாட்டு சம்பிரதாய குத்பாக்களும் முக்கியக் காரணமாகும். சிலர் நாங்கள் அரபியில் தான் குத்பா உரை நிகழ்த்துவோம் எனக் கூறி குத்பாவுக்கு முன்னர் மேடையில் ஏறுமுன் தமிழில் ஒரு (குத்பா) உரை நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். இதையும் சேர்த்து மூன்று குத்பாக்களாகி விடுவதால் நபிகள் (ஸல்) ஆற்றிய இரு உரைகளுக்கு மாற்றமான (ஒரு பித்அத்) செயலாகி விடுகிறது.எனவே இதைத் தவிர்த்து மிம்பர் மேடையிலேயே இரு குத்பாக்களையும் அவரவர் மொழியில் ஆற்றப்படுவதற்கு ஆவன செய்யப்படவேண்டும்.
உரையை கவனமாகக் கேட்பது
குத்பா உரையை மிகவும் கவனமாகக் கேட்கவேண்டும். அந்த வேளையில் பேசுவதும் வேறு சிந்தனைகளிலும் பராக்குகளிலும் ஈடுபடுவதை நபி(ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.
யார் குத்பாவை கேட்கும்போது தரையில் கிடக்கும் பொடிக்கற்களை இங்குமங்கும் புரட்டிக்கொண்டிருக்கிறாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மை வீணாகிவிட்டது என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)
இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினால் நீயும் வீணான காரியத்தில் ஈடுபட்டவனாவாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்)
நபி(ஸல்) மிம்பரில் (குத்பா உரை நிகழ்த்த) நின்று விட்டால் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதிலிருந்தே ஜும்ஆ குத்பாவின் உரையின் முக்கியத்துவத்தை உணரலாம்.
ஜும்ஆவுக்கு குளித்து நறுமணம் பூசி வருவது
உங்களில் ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளவும் என நபி(ஸல்) கூறினார்கள்.
(
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா (1088), நஸயீ -1315) )
ஜும்ஆ நாளில் குளித்து இயன்றவரை தூய்மைப்படுத்தி பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி பள்ளிக்கு வந்து (அங்கே அமர்ந்திருப்பவர்களைப் ) பிரிக்கும் விதமாக அமராமல் விதிக்கப்பட்டதை தொழுது பின்னர் இமாம் சொற்பொழிவு நிகழ்த்த வந்ததும் மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் மறு ஜும்ஆவுக்குமிடையேயுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்பார்ஸி (ரலி) நூல்;: புகாரி, அஹ்மது)
ஜும்ஆ நாளன்று பருவமெய்திய ஒவ்வொருவரும் குளித்து மிஸ்வாக்குச்செய்து இயன்ற வரை நறுமணம் பூசிக் கொள்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரலி), நூல்;: அபூதாவூது-371)
ஜும்ஆவுக்கு வருபவர் குளித்து மிஸ்வாக்குச் செய்து தூய்மையோடும் நறுமணம் பூசியும் வரவேண்டுமென்பதையும் மவுனமாக இருந்து குத்பாவை கருத்தூன்றிக் கேட்பதையும் இந்த நபி மொழிகள் வலியுறுத்துகின்றன.
ஜும்ஆவிற்கு முன்னரே செல்வது
ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பைப் போன்று குளித்து அதன்பிறகு (பள்ளிக்குச் செல்லுபவர் ஒரு ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறத்துப்பலியிட்டவராவார். இரண்டாவது வேளையில் செல்வோர் ஒரு மாட்டை அறுத்துப்பலியிட்டவராவார். மூன்றாவது வேளையில் செல்வோர் ஒரு கொம்புள்ள ஆட்டை அறுத்துப்பலியிட்டவராவார். நான்காவது வேளையில் செல்வோர் ஒரு கோழியை அறுத்துப்பலியிட்டவராவார். ஐந்தாவது வேளையில் செல்வோர் ஒரு முட்டையை கொடுத்தவராவார்.
இமாம் குத்பா ஓதுவதற்காக புறப்பட்டு வந்துவிட்டால் (நன்மைகளை பதிவு செய்யும்) வானவர்கள் (தங்கள் பதிவேடுகளை) மூடிவிட்டு இமாம் நிகழ்த்தும் குத்பா உரையைக் கேட்பதற்காக (பள்ளிக்கு) ஆஜராகிவிடுவார்கள் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: இப்னுமாஜா, நஸயீ, புகாரி, முஸ்லிம்)
உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள்
முஸ்லிம்களின் (ஈத்) பெருநாளாக விளங்கும் ஜும்ஆத் தொழுகைக்கு முன்னரே சென்று வானவர்களின் பதிவேட்டில் நமது பெயர்களைப் பதிவு செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவதற்கு முனைப்போடு இருந்து வரவேண்டும்.
துஆ அங்கீகரிக்கப்படும் நேரம்
மூன்று நேரங்களை அல்லாஹ் தன்னிடம் மறைத்து வைத்துள்ளான். கியாமத்நாள் எப்போது நிகழும் என்பதையும், லைலத்துல் கத்ர் என்னும் மாண்பார் இரவு ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் என்று வரும் என்பதையும், ஜும்ஆவின் துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் எது என்பதையும் மறைத்து வைத்துள்ளான்.
சூரியன் உதிக்கும் நாட்களில் சிறந்த நாள் ஜும்ஆவின் நாளாகும். அன்றுதான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அன்று தான் சுவனத்திலிருந்து (பூமிக்கு) இறக்கி வைக்கப்பட்டார்கள். அந்த நாளில் ஒரு நேரமுண்டு. அதில் முஸ்லிமான அடியார் தொழுதுவிட்டு கேட்கும் எதையும் அல்லாஹ் மறுப்பதில்லை. என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா)
அந்த நேரம் எதுவென இரு நபிமொழிகள் தெரிவிக்கின்றன. ஒன்று இமாம் மிம்பரில் ஏறியது முதல் தொழுகை முடியும் வரை என்றும் பிறிதொன்று அஸர் முதல் மஃக்ரிப் தொழுகை வரை என்றும் உள்ளன.
துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் இமாம் எழுந்து மிம்பரில் அமர்ந்தது முதல் தொழுகை முடியும் வரையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்;: இப்னு உமர் (ரலி) )
நான் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)யிடம் அந்த நேரத்தைப் பற்றி கேட்ட போது அவர்கள் ஜும்ஆ நாளின் அஸருக்குப்பின் தொடங்கி சூரியன் மறைவது வரையாகும் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்;: இப்னுமாஜா )
இந்த இரு ஹதீஸ்களிலிருந்து அந்த நேரம் இமாம் மிம்பரில் அமர்ந்தது முதல் சூரியன் மறையும் வரையாகும் என்பதையும் அதில் நம் தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெறுவதில் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஜும்ஆவின் முன் ஸுன்னத்து தொழுகை உண்டா?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா என்று நபி(ஸல்) கேட்க, அவர் இல்லை என்றார். (அப்போது) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என நபி(ஸல்) அவரிடம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது)
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். ஸுலைக் இரண்டு ரகஅத்கள் சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி(ஸல்) அவரிடம் கூறிவிட்டு, இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது யாரேனும் வந்தால் சுருக்கமாக அவர் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த உத்தரவுக்கு மாற்றமாக தாமதமாக வருபவர் குத்பா வேளையில் தொழாமல் உட்காருவதையும் தொழுபவரை தடுப்பவர்களையும் இன்று காண முடிகிறது. இது நபி வழிக்கு மாற்றமாகும்.
ஜும்ஆ தொழுகைக்கு முன் ஸுன்னத்து தொழுகை கிடையாது. ஆனால் பள்ளிவாசலுக்குரிய தஹிய்யத்துல் மஸ்ஜித் இரு ரகஅத்துகளையே நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். சிலர் இது காணிக்கை தொழுகை இல்லை. முன் ஸுன்னத் தொழுகையெனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்கள் அங்கிருந்தவர்களில் முன் ஸுன்னத் தொழாதவர்களை தொழவேண்டுமென கட்டளையிட்டிருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து நேராக பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி குத்பா உரையை துவங்கி விடுவதால் இது முன் ஸுன்னத் அல்ல என்பது தெளிவாகிறது.
ஜும்ஆவின் பின் ஸுன்னத்து தொழுகை
உங்களில் எவரேனும் ஜும்ஆ தொழுதால் அதன் பின் நான்கு ரகஅத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: முஸ்லி;ம், திர்மிதீ, அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது) நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவின் பின் வீட்டிற்குச் சென்று இரு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்.)
ஓதவேண்டிய அத்தியாயங்கள் 
1.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் ஜும்;ஆ என்ற (62ஆவது) அத்தியாயத்தையும், முனாஃபிக்கீன் என்ற (63ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூற்கள்:முஸ்லிம், அஹ்மது, அபூதாவூது, நஸயீ
2. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தொழுகையில் அல் அஃலா என்ற (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்னும்87ஆவது) அத்தியாயத்தையும், அல் காஷியா எனற ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா என்னும் 88ஆவது) அத்தியாயத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். (அறிவிப்பவர்: ஸமுரா (ரலி), நூற்கள்:அஹ்மது, அபூதாவூது, நஸயீ )
பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை
பெண்களுக்கு ஏனையத் தொழுகையைப் போன்றே ஜும்ஆ தொழுகைக்கும் நபி(ஸல்) அவர்கள் தொழ அனுமதித்துள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழ அனுமதி கேட்டால் அவர்களின் (அந்த) உரிமைகளை நீங்கள் தடுக்க வேண்டாம் என நபி(ஸல்) கூறியுள்ளனர். (நூல்: முஸ்லிம்)
பள்ளி வாசலுக்குத் தொழவரும் உங்கள் பெண்களை நீங்கள் தடை செய்யாதீர்கள். எனினும் (தொழுவதற்கு) அவர்களுடைய வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.( நூற்கள்: அபூதாவூத், மிஷ்காத்-1062.)
பெண்களே! ஜும்ஆ நாளன்று இமாமுடன் நீங்கள் ஜமாஅத்தில் தொழுதால் ஜும்ஆவை (இரு ரகஅத்கள்) தொழுங்கள்! நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுதால் ளுஹரை நான்கு ரகஅத்துகள் தொழுங்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் எங்களுக்கு கூறுவார்கள் என அப்துல்லாஹ் இப்னு மிஃதானின் பாட்டி கூறுகிறார்கள். (நூல்: இப்னு அபீ ஷைபா)
பெண்கள் தாராளமாக பள்ளிவாசல் சென்று தொழலாம். இன்று அவர்களுக்கென தனி இடங்கள் ஒதுக்கப்பட்ட பள்ளிவாசல்களை உலகெங்கும் பரவலாகக் காண முடிகிறது.
ஜும்ஆவை தவற விட்டவர் 
ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரகஅத்தைப் பெற்றுக் கொண்டவர் ஜும்ஆவைப் பெற்றுக் கொண்டவராவார் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: நஸயீ
ஜும்ஆவின் இரண்டு ரகஅத்துகளும் ஒருவருக்குத் தவறிவிட்டால் அவர் நான்கு ரகஅத்துகள் தொழவும் என நபி(ஸல்)கூறினார்கள். நூல்: அல் தப்ரானீ
ஜும்ஆவுடைய ஒரு ரகஅத்தை தவற விட்டடவர் இமாமுடன் ஒரு ரகஅத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தபின் எழுந்து ஒரு ரகஅத் தொழவேண்டும். இரண்டாவது ரகஅத்தின் ருகூவுக்குப்பிறகு ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் இமாமுடன் வந்து சேர்ந்தால் அவர் ளுஹரை மனதில் எண்ணி நான்கு ரகஅத்து ளுஹரை நிறைவேற்றவும். அவர் ஜும்ஆவாக நிறைவேற்றினால் அது நிறைவேறாது.
ஜும்ஆவின் ஜமாஅத்திற்கு பிறகு வருபவர் தனியாகவோ அல்லது ஜமாஅத்தாகவோ தொழுவதாக இருந்தால் நான்கு ரகஅத்துகள் ளுஹர் தொழவேண்டும். அவர் பயணத்திலிருந்தால் ளுஹராகவும் கஸ்ராகவும் தொழுது கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் பயணத்திலிருந்தால் ஜும்ஆ நாளன்று ளுஹர் தொழுவார்கள். ஜும்ஆ தொழுகை ளுஹருக்கு பரிகாரமாகும்
அல்பாகவி.காம்


இறந்தவர்களுக்காக!

முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காகபாத்திஹா ஓதுதல்என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை இருக்கும்.
அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட பாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் இரவு மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 40 நாட்களுக்கும்பாத்திஹாக்கள் ஓதி வருவர்.
இது உண்மையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால் இல்லை இந்த பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து இது மார்க்கதில்இல்லாத ஒன்றும் ,பித்அத் என்றும் அறியலாம்.
ரசூல்(ஸல்) அவர்கள் இறந்தவர்களுக்கு இது போன்ற பாத்திஹாக்களை ஓதும்படி கற்றுத்தரவில்லை. இறந்தவர்களுக்கு ஏதாவது நன்மை போய் சேரவேண்டுமென்று தான் மக்களில் பலர் பாத்திஹாக்களைஓதி வருகின்றனர். இறந்தவர்களுக்கு என்ன செய்யலாமென்று இனி ஹதீஸ் ஆதாரங்களைப்பார்ப்போம்.
துஆச் செய்தல்
மைய்யித்தைஅடக்கி விட்டு அங்கே நின்ற நபி(ஸல்) அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்குஉறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (இப்னு உமர்(ரழி) அபூதாவூத்,ஹாகிம்)
குடும்பத்தாரோ இறந்தவருக்கு தான் துஆக் கேட்காமல் கபுருக்கு அருகில் இமாம்பாத்திஹா ஒத மற்றவர் ஆமின் கூறும் நடைமுறையையே காணுகிறோம்.
அடுத்து இறந்தவருக்காக அவரது குழந்தைகள் துஆச் செய்யவேண்டும்.
ஒரு மனிதன் இறந்துவிட்டால்அனைத்தும் நின்றும் விடுகின்றன. நன்மையைத் தொடர்ந்து தரும்படியான இவன் செய்த தர்மம், பிறர் பயன்படும் கல்வி, இவனுக்காக துஆச் செய்யும் இவனது குழந்தை ஆகிய மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அஹ்மத்)
இந்த ஹதீஸில் பிள்ளைகள் துஆச் செய்ய வேண்டுமென்பதை அறிகிறோம் ஆனால், நடைமுறையோ கூலிக்கு ஆள் பிடித்து பாத்திஹா என்ற பெயரில் பத்தி, சாம்பிராணி, கறி, சோறு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். 
தர்மம் செய்தல் 
 எனது தாய் மரண வேளையில் இருந்தார்கள். அவர்கள் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படிச் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அவர்களுக்கு பலன் தருமா? என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தர்கள். (ஆயிஷா(ரழி) புகாரி, முஸ்லிம்)
எனது தந்தை சிறிது சொத்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இறந்துவிட்டர். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால்அவருக்கு (அல்லாஹ்) பகரமாக்குவானா? என்று ஒருவர் கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.அபூஹுரைரா (ரழி) முஸ்லிம், அஹ்மத்) 
நோன்பு வைத்தல் 
 அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒருமாத நோன்பு வைப்பதுதம்மீது கடமையாயிருக்க இறந்துவிட்டனர். நான் அதை அவர்களுக்காக நிறைவேற்றலாமா? என்று ஒருவர் கேட்டார். உனது தயாருக்கு கடன்இருந்தால் அதை அவர்களுக்காக நிறைவேற்றத் தானே செய்வாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானல் நிறைவேற்றப்பட அதிக தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடன்(நோன்பு) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி, முஸ்லிம்) 
ஹஜ் செய்தல் 
 என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்கள், ஆனால் இறக்கும்வரை அதை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஜுஹைனா என்ற கிளையைச் சேர்ந்தஒரு பெண் கேட்டார் அதற்கு என்று நபி(ஸல்) அவர்கள், நீ அவர்களுக்காக ஹஜ்செய். எனவேஇந்த(ஹஜ்) கடனையும் நிறைவேற்று. அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகக் தகுதி வாய்ந்தது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி)புஹாரி) 
ஒரு மூமின் இறந்து விட்டால் அவரதுபிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதைமேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!


பிரிவுப் பெயர்கள் கூடாது, ஏன்?

பிரிவுப் பெயர்கள் கூடாது, ஏன்?

பிரிவுப் பெயர்கள் கூடாது என்பதற்கு ஆதாரமாக குர்ஆனிலிருந்து 2:213, 6:159, 21:92,93, 23:53, 42:14, 45:17 ஆகிய வசனங்களை சமர்ப்பிக்கிறீர்கள். இந்த வசனங்களை ஆழ்ந்து நோக்கிய எனக்கு சில சந்தேகங்கள். 2:213வது வசனத்தில் வேதக்கட்டளை பின் வேறுபாடு கொண்டவர்களைக் கண்டிக்கிறான். நேர்வழி நடக்கும் இயக்கத்தார்கள் முகல்லீது மெளலவிகளைப்போல் வேத வசனங்களில் கருத்து வேறுபாடு கொள்ளவில்லையே. இந்நிலையில் அவர்களை எப்படிக் கண்டிக்க முடியும்?

 6:159 வசனத்தில் மார்க்கத்தைப் பலவாறாகக் கூறுபோடுபவர்களைக் கண்டிக்கிறான். IAC, JAQH ஆகியோர் மார்க்கத்தின் பிரிவை உண்டு பண்ணவில்லை என்பதே உண்மை. குர்ஆன் நபிவழியில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டு தனிப் பெயரில் செயல்படுகிறார்கள் அவ்வளவுதான், அதேபோன்று 21:92ல் நீங்கள் ஒரே சமுதாயத்தவர்கள் (உம்மதன் வாஹிதா) என்று கூறுவது உண்மை. இதை வைத்து தனி பெயரில் இறங்கிய நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே ஒரே சமுதாயமான முஸ்லிம்கள் “அன்சாரிகள்”, “குறைஷிகள்”, “முஹாஜிரீன்கள்” போன்று தனித்தனி பெயர்களைச் சூட்டிக் கொண்டு வாழந்துள்ளார்கள். இதையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்கும்போது, குர்ஆன், ஹதீஸ் வழி நடப்போர் தனிப் பெயரிலும் செயல்படலாம் என்பது புலனாகின்றது.

21:93ல் வசனம் பிரிவைக் கண்டித்தாலும், 94ம் வசனம் (குர்ஆன், ஹதீஸை) விசுவாசங்கொண்டு நடப்போர் வெற்றியாளர்களே என்று சொல்கிறது. அதேபோன்று 23:53, 30:32, 42:4, 45:17, ஆகிய வசனங்கள் கூட எதைக் கண்டிக்கின்றது என்பதை அலசும்போது மார்க்கத்தின் வாழ்க்கை வணக்க வழிபாட்டின் (உதாரணமாக : ஒதுக்கப்படவேண்டிய மத்ஹபுகள்) பிரிவினையை உண்டுபண்ணும் அறிவிலிகளின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றதேயல்லாமல் குர்ஆன் ஹதீஸைப் பற்றிப் பிடித்து தனிப் பெயரில் (சட்ட திட்டங்களில்லை) செயல்படுவதை கண்டிப்பதைக் காண முடியவில்லை. என் கருத்தில் தவறு இருப்பின் தெளிவு படுத்துங்கள்.

பரங்கிப்பேட்டை, கு. நிஜாமுத்தீன், செளதி அரேபியா.

தடுக்கப்பட்ட பிரிவுப் பெயர்கள் எவை, அடையாளம் தெரிந்து கொள்ளுவதற்காக அனுமதிக்கப்பட்ட பெயர்கள் எவை என்பதைத் தீர்க்கமாக நீங்கள் அறிந்துகொண்டால் குழப்பம் தீர்ந்துவிடும். அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரிந்து கொள்ள இடப்படும் பெயர்கள் வழிகேட்டில் செல்லும் 72 பிரிவினரிலிருந்து பிரிந்து, வெற்றி பெறும் ஒரே கூட்டம் என்ற கருத்தில் இடப்பட்டவை அல்ல என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களே தக்க சான்றாகும்.

முஹாஜிர்கள், அன்சாரிகள் என்ற பெயர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் புறப்பட்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் குறிக்கும். அவர்களில் யாரும் நாங்கள்தான் வெற்றி பெற்ற கூட்டம் என்றோ, முஹாஜிர்கள், அன்சாரிகள் என இயக்கம் அமைத்துக் கொண்டோ அழைப்புப்பணி செய்ததாக வரலாறு இல்லை. அதேபோல் குறைஷ்கள், குறைஷி என்பவரின் மக்களை குறிக்குமே அல்லாமல் வெற்றி பெறும் கூட்டம் என்ற பொருளைத் தராது. குறைஷ் பெயரில் இயக்கம் அமைத்து அழைப்புப்பணி செய்ததாகவும் வரலாறு இல்லை. இப்பெயர்கள் அவர்களாகத் தங்களுக்குச் சூட்டிக்கொண்ட பெயர்களுமல்ல.

ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH என்ற பிரிவுப் பெயரின் பொருள் என்ன? “குர்ஆன், ஹதீஸின்படி செயல்படும் ஜமாஅத்” என்று சொல்லுவார்கள். முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ்படி செயல்படக் கடமைப்பட்டவர்கள் தானே, அப்படியானால், முஸ்லிம் என்று அல்லாஹ் இட்ட அழகிய பெயர் இருக்க JAQH என்று ஏன் பெயரிட்டீர்கள்? என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவார்கள்? “முஸ்லிம்” என்ற பெயரில் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாகச் செயல்படும் பல பிரிவார் இருக்கிறார்கள். அவர்களிலிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டவே எங்களுக்கு JAQH என்ற பெயரைச் சூட்டியுள்ளோம் என்று சொல்லப் போகிறார்கள். இதைத் தவிர வேறு நியாயமான எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. அதாவது, முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். சமுதாயத்தை மற்றவர்களைப் போல் இவர்களும் கூறு போடுகிறார்கள். இப்படிச் சமுதாயத்தைக் கூறு போடும் பெயர்களையே பிரிவுப் பெயர்கள் என அல்லாஹ் கண்டிக்கிறான். இப்படிப்பட்ட பெயர்களையே நீங்கள் குறிப்பிடும் வசனங்கள் அனைத்தும் குறிப்பிட்டுக் கண்டிக்கின்றன.

வழிகெட்ட 72 பிரிவினரையும் நரகத்திற்கு அனுப்பிவிட்டு, வெற்றி பெறும் ஒரே ஒரு கூட்டத்தை மட்டும் சுவர்க்கத்திற்குப் பிரித்து அனுப்பும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அது மறுமையில் செவ்வனே நடைபெறும். அதற்காக 72 கூட்டத்திலிருந்து வெற்றி பெறும் கூட்டம் தாங்களாக இவ்வுலகிலேயே தங்களைப் பிரித்துக் காட்டி அல்லாஹுவின் தனித் தன்மையில் பங்கேற்கப்போக வேண்டியதில்லை. இவ்வுலகில் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு வழிகேட்டில் இருக்கும் 72 பிரிவினரும், வெற்றிபெறும் ஒரு பிரிவினரும் முஸ்லிம் உம்மத்தைச் சார்ந்தவர்களே. “எனது உம்மத்து 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள்” என்று நபி(ஸல்) அவர்களே கூறி இருக்கும் நிலையில், அதாவது நபி(ஸல்) அவர்களை வழிகெட்டவர்களைத் தங்களுடன் இணைத்துச் சொல்லியிருக்க இவர்கள் அவர்களை விட்டும் தங்களைப் பிரித்துக்காட்ட முற்படுவது முறைதானா? முஸ்லிம் உம்மத்திலிருந்து அவர்களை இவ்வுலகிலேயே பிரித்துக் காட்ட இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

இன்று நமது இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காணப்படும் பல விஷயங்களில் இவர்கள் எந்த முஸ்லிம்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி JAQH என்று காட்டிக் கொள்கிறார்களோ. அவர்கள் முஸ்லிம்களின் தரப்பில் இருக்கிறார்களா? அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தரப்பில் இருக்கிறார்களா? இதையாவது சிந்தித்து உணர வேண்டாமா? முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள இந்திய நாட்டில் முஸ்லிம்களிடையே பிரிவினையை உண்டாக்காமல், அனைவரையும் ஒன்றாக அணைத்துச் சென்றால் அது எவ்வளவு பெரிய பலமாக இருக்கும் என்பதை இவர்களால் உணர முடியவில்லையா? அல்லது அவர்களைத் தங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ் தவறுதலாக இவர்களுக்குக் கிடைக்கும் சுவர்க்கத்திலிருந்து பாகம் பிரித்து அவர்களுக்குக் கொடுத்து விடுவான் என்று அஞ்சுகிறார்களா?

வழிகேட்டில் செல்லும் அவர்களின் வழிகேட்டைத் தெளிவாகப் புரிந்து, அவை குறித்து எச்சரிப்பதோடு அந்த வழிகேட்டில் இருந்து இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. அதல்லாமல் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களிலிருந்து JAQH என்று தங்களைப் பிரித்துக் காட்டுவதால் அழிவைத் தரும் பெயர் புகழைத் தவிர வேறு என்ன லாபம் இவ்வுலகிலும், மறுமையிலும் கிடைக்கப் போகிறது. அதனால் முஸ்லிம் உம்மத்தில் மேலும் பிளவுகள் ஏற்பட்டு மாற்று மதத்தார்களிடம் மட்டுமில்லாமல், முஸ்லிம் பிரிவினைவாதிகளிடமும் தலைகுனிவு தான் ஏற்படுகிறது. அதல்லாமல் முஸ்லிம்கள் தங்கள் தங்கள் பிரிவுகளில் வலுவாக நிலைத்திருக்கவும் வழி வகுக்கிறது. முஸ்லிம் உம்மத் ஒன்றுபட்டு உயர வேண்டுமென்றால் பிரிவிப் பெயர்களை ஒழித்து “முஸ்லிம்” என்ற பெயரில் ஒரே தலைமையில் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆக JAQH பிரிவுப் பெயரே அன்றி – அது ஒரு அமைப்போ அல்லது இயக்கமோ அல்ல என்பதே உண்மையாகும்.

அடுத்து நீங்கள் குறிப்பிட்டுள்ள JAQH பற்றிப் பார்ப்போம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆயத்துகளில் கண்டிக்கப்படும் ஷிபா, சுன்னத் ஜமாஅத், ஹன்பி, ஷாபி, மாலிக், ஹம்பலி, அஹ்லஹதீஸ் JAQH போன்ற பிரிவுப் பெயர்களைச் சார்ந்தது IAC என்று நாம் ஒருபோதும் சொன்னதில்லை. வழிகேட்டிலிருப்பவர்களிலிருந்து பிரித்துக் காட்டும் நோக்கத்துடன் வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல IAC, IAM, ISM போன்றவை. ஆயினும் மார்க்கப்பணி செய்வதற்காக இவர்களாகத் தங்களுக்கு இட்டுக் கொண்ட பெயர்களாகும். அழைப்புப் பணி செய்கிறவர்கள் தங்களுக்கென்று ஒரு தனிப்பெயரை இட்டுக்கொள்ள மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? என்று பார்த்தால் அனுமதி இல்லை என்ற விடையே கிடைக்கும்.

 “எவர் அல்லாஹ் அளவில் (ஜனங்களை) அடைத்து(த் தாமும்) நற்கருமங்களைச் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளேன்” என்றும் கூறுகின்றாரோ, அவரை விட அழகான வார்த்தை கூறுபவர் யார்? (41:33)” என்று அல்லாஹ் கூறியிருப்பதிலிருந்தே, மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்களை முஸ்லிம்களிலிருந்து பிரித்துக் காட்டக் கூடாது என்பதை உணர முடிகிறது.

(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீயச் செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுலிருக்கவும், இத்தகையோர்தாம் வெற்றி பெற்றோர்.  (3:104)

இந்த குர்ஆன் வசனமும் அவர்களை ஜமாத்தாக இயங்க அனுமதி அளிக்கிறதேயன்றி அவர்கள் தனியொரு இயக்கப் பெயரில் செயல்படலாம் என்ற அனுமதி தரவில்லை. முஹாஜிர்கள், அன்சாரிகள், குறைஷிகள், ஹாஷிம்கள் என்ற பெயர்களை ஆதாரம் காட்டி தங்களின் இயக்கப் பெயர்களை நியாயப்படுத்துகிறவர்கள் தவறிழைக்கின்றனர் என்பதே உண்மையாகும்.

காரணம் அவர்கள் எடுத்துக்காட்டும் எந்தப் பெயரிலும் இயக்கம் அமைக்கப்பட்டு மார்க்கப் பிரச்சாரம் செய்து வந்ததற்கு எவ்வித ஆதாரமில்லை. அவர்களில் தலைவர், செயலர், பொருளாளர் என யாரும் பதவி வகித்ததாகவும் வரலாறு இல்லை.

அடுத்து நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனி இயக்கப் பெயர்களில் மார்க்கப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு முடிவே இல்லை என்றால் இந்த இயக்கத்தினர் அனைவரும் என்று ஒன்று சேரப்போகிறார்கள்? ஒரே தலைமையின்கீழ் எப்போது இந்த உம்மத்தை ஒன்றிணைக்கப் போகிறார்கள். நீங்களும் ஒப்புக்கொள்ளும் ஒரே சமுதாயம் (உம்மத்தன் வாஹிதா) எப்போது ஏற்படப்போகிறது? உலக அழிவுதான் வரை இது சாத்தியமாகப் போவதில்லை. இயக்கங்களை ஒழித்துவிட்டு இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படுவது கொண்டே இது சாத்தியமாகும். பல இயக்கங்களுக்கு அனுமதி இருக்கும் வரை சமுதாய ஒற்றுமைக்கு வழியே இல்லை.

இயக்க அமைப்புகளில் செயல்படுகிறவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில அங்கங்களைச் செயல்படுத்த முடியுமேயன்றி, நபி(ஸல்) அவர்களது காலத்திலும், சிறப்புக்குரிய நான்கு கலீஃபாக்களின் காலத்திலும் இருந்ததுபோல் இஸ்லாத்தை முழுமையாகச் செயல்படுத்துகிறவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது. இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையாக இருக்க முடியாது.

முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமை ஒருபோதும் இருக்கமுடியாது. சமுதாய ஒற்றுமையைக் குலைக்கும் இப்படிப்பட்ட இயக்க அமைப்புகளுக்கு குர்ஆன், ஹதீஸில் எப்படி ஆதாரம் இருக்கமுடியும்? சமாதிச் சடங்கு செய்வோர் முகல்லிதுகள் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டித் தங்களின் தவறான நிலைகளை நியாயப்படுத்துவது போல், இவர்களும் சம்பந்தமே இல்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரங்களாகத் தருகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர். அவை கொண்டு தங்கள் தவறான போக்கை நியாயப்படுத்துகின்றனர்.

மார்க்கத்தின் பெயரால் இயக்க அமைப்புகளுக்கு ஆதாரமில்லை என்பது ஒரு புறமிருக்க. அப்படி இயக்க அமைப்புகளில் செயல்படும் இயக்கங்களில் காணப்படும் உட்பூசல்கள், ஒரு இயக்கத்திற்கும் மற்றொரு இயக்கத்திற்கும் இடையில் காணப்படும் போட்டி பொறாமை இவை அனைத்தைக் கண்கூடாகக் கண்ட பின்பாவது படிப்பினை பெற வேண்டாமா?

இந்த உம்மத், முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒரே தலைமையில் ஒன்றுபடாத வரையில் இந்த சமுதாயத்தில் மறுமலர்ச்சியைப் பார்க்க முடியாது. அந்த ஒற்றுமைக்கு இந்தப் பிரிவுப் பெயர்களும், இயக்கப் பெயர்களும் முழுக்க முழுக்கத் தடையாக இருக்கின்றன என்பதை உங்களைப் போன்றவர்களும், மற்றவர்களும் உணர வேண்டும். இவ்வாறு நாம் எழுதுவது மார்க்கப் பணியில் தீவிரமாக தற்போது ஈடுபட்டுள்ள துடிப்புள்ள பல இளைஞர்களுக்குக் கசப்பாகவே இருக்கும் என்பதையும், அதனால் அவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன என்பதையும் நாம் நன்கு அறிவோம்.

அவர்களைத் திருப்திப்படுத்த சத்தியத்தை வளைத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு நாம் தயாராக இல்லை. நாம் சத்தியத்தை எழுதி வருவது மக்களின் நல் ஆதரவை எதிர்பார்த்து அல்ல. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மனதில் கொண்டே செயல்பட்டு வருகிறோம். இன்றில்லாவிட்டாலும் நாளை அல்லது நமக்குப் பின்பாவது இந்த எழுத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று அல்லாஹ் மீது ஆதரவு வைக்கிறோம்.

அந்நஜாத்

குர்ஆனின் நற்போதனைகள் - நாவைப் பேணுக!

உண்மை பேசுக! 

அல்லாஹ், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

நேர்மையாக பேசுக! 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.

அழகானதைப் பேசுக! 

பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83

கனிவாகப் பேசுக! 

உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். 4:8

நியாயமாகப் பேசுக! 

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். 6:152

அன்பாகப் பேசுக! 

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்த்துடுக! 

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசாதீர்! 

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

புறம் பேசாதீர்! 

உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 49:12

ஆதாரமின்றி பேசாதீர்! யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும். 40:35

அவதூறு பேசாதீர்! 

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்;

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...