Friday, June 27, 2014

நாவைப் பேணுவோம்

Post image for நாவைப் பேணுவோம்

அன்பு சகோதர, சகோதாிகளே அஸ்ஸலாமு அழைக்கும்….
சிறிது நேரம் கிடைத்துவிட்டாலோ, அல்லது இரண்டு பேர் கூடி விட்டால் போதும் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம்;. அதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும். அது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்று நம் அனைவருக்கும் தொியும். ஆனாலும் நாம் புறம் பேசுவதை நிறுத்துகிறேமா என்றால் இல்லை என்பது நாம் அனைவருக்கும் தொிந்த விஷயம்.
    இஸ்லாம் புறம் பேசுவதை பற்றி என்ன கூறியிருக்கிறது என்று தொிந்து கொள்வது முஸ்லிமாகிய நம் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    யாரேனும் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டவர்“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது
சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம் தவறுகளின் பிறப்பிடமே இந்த நாக்குதான். எனவே நாம் உறுப்புகளில் மிகவும் அஞ்ச வேண்டிய உறுப்பு நாக்குதான் ஆகையால் இந்த நாக்கு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
    “அல்லாஹ்வின் தூதரே, என் மீது தாங்கள் மிகவும் பயப்படுவது ஏன்? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தன் நாவை பிடித்துக் கொண்டு இதுதான் (அதிகமாக அஞ்சுவது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் தகபிஃ(ரழி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே நாவின் விஷயத்தில் அஞ்சும் நமது நிலை பற்றி சிந்தித்து பாருங்கள் அது மட்டுமல்ல புறம் பேசுதல் தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக நமக்கு எச்சாிக்கை செய்கிறது.
    பிறர் குறைகளை துருவி துருவி ஆராய்பவர்
“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (49:12)”
சிந்தியுங்கள் சகோதரர்களே இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு எந்த மனிதனாவது முன் வருவானா? முன் வருவது இருக்கட்டும் மனதிலாவது நினைப்பானா? அப்படி செய்பவனை நாம் எவ்வளவு கேவலமாக பார்ப்போம். சிந்தியுங்கள் சகோதரர்களே அல்லாஹ்வின் முன் புறம் பேசித்திறியும் அனைவரது நிலையும் அப்படி தான் உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.
    சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம். இது தேவைதானா?
    இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்
“எவாின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர்(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம், அபூதாூத்
    சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே நமது மார்க்கம் பிறர் நலம் பேனுவதில் எவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்கிறது என்று.
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்
“ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்;: புகாாி
    நரகத்திற்கு செல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் அதிகமாக சாபமிடுதலும் கணவனுக்கு மாறு செய்வதும் ஆகும். இவ்விரண்டு குற்றங்களும் பெண்கள் தான் செய்கிறார்கள். எனவே பெண்கள் தான் நரகில் காணப்படுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கீழ்வரும் ஹதீஸ்களில் நமக்கு தொியப்படுத்துகிறார்கள். எனவே பிறரை சபிப்பதும், கணவனுக்கு மாறு செய்வதும் பெண்களை நரகில் கொண்டு போய் சேர்க்கும். எனவே பெண்கள் நாவிற்கு பயப்பட்டு கவனமாக பயன்படுத்தவேண்டும்.
    அதிகமாக சாபமிடும் பெண்கள்
“ஒரு நபி(ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது நோன்பு பெருநாளன்று தொழும் இடத்திற்கு வந்து பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது தர்மம் செய்யுங்கள். பெண்கள் சமுதாயமே, உங்களை நரகவாதிகளில் மிக அதிகமானவர்களாக பார்க்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என்று கேட்டார்கள். நீங்கள் சாப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்க்ள என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
    தன் சகோதரனிடம் உள்ள குறைகளை பிறாிடத்தில் சொல்வதால் அவன் மனது கஷ்டத்திற்கு ஆளாகிறது. காரணம் இவனை பற்றி நல்ல மதிப்பு கொண்டவன் இக்குறையை கேட்பதால் மதிப்பிழந்து பார்க்கிறான். எனவே இவை புறம் பேசுவது ஆகும். அதே நேரத்தில் அவனிடம் இல்லாத ஒன்றை நாம் பேசும் போது அவதூறு பேசுவது ஆகும். இது போன்றவை சர்வ சாதாரணமாக நம்மிடையே நடக்கிறது. எனவே இது விஷயமாக நாம் மிகவும் எச்சாிக்கையாக இருக்கவேண்டும்.
    புறம் என்றால் என்ன?
“புறம் என்றால் என்ன என்பதைபற்றி நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அறிவீர்களாக என கேட்டபோது, அல்லாஹ்வும், அவன் தூதருமோ தவிர மிகவும் அறிந்தவர் என தோழர்கள் கூறினார்கள். (புறம் என்பது) உன் சகோதரன் வெறுப்பதை நீ பேசுவதற்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தால் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீ சொல்வது அவாிடம் இருந்தால் புறம் பேசி விட்டாய். அவ்வாறு அவாிடம் இல்லை என்றால் அவர் மேல் இட்டு கட்டிவிட்டாய் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
    ஒருவர் எவ்வளவு தான் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் தன் நாவின் கெட்ட வார்த்தைகளால் நரகத்திற்கு போய் விடுகிறான், தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை குறைத்துக் கொண்டாலும் தன் நாவை கெட்ட பேச்சுகளில் இருந்து தவிர்த்து கொள்வதால் சுவனம் செல்ல காரணமாக இருக்கிறது என்று பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தொிந்து கொள்ளலாம்.
    அதிகமாக அமல்கள் செய்தும் நாவால் துன்பம் தருபவர்
“ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறால் – ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: அஹ்மத், பைஹகீ
    புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
    இன்று மற்றொரு விஷயம் நம் பெண்களிடையே மிகவும் மோசமான நிலை அதுதான் அவதூறு பிறர் மணம் நோகும் என்று சிறிது கூட சிந்தித்து பார்ககாமல் அபாண்டமாக அவதூறு பேவிவிடுகிறார்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.
    “அல்லாஹ் உங்கள் மீது தாய்மார்களை கொடுமைபடுத்துவத்தையும் பெண் மக்களை உயிரோடு புதைப்பதையும் அனுமதித்தவற்றையும் தடை செய்வதையும் தடை செய்து விட்டான். மேலும் இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது என்று கூறுவதையும், அதிகம் கேள்வி கேட்பதையும் பொருளை வீணடிப்பதையும் வெறுக்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள்.” அறிவிப்பவர்:  முகீரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
    ஒரு பெண் விஷயத்தில் சொல்லப்படும் அவதூறு அவளின் வாழ்க்கை நிரந்தரமாக பாழ் ஆகிவிடும். நல்ல பெண் என்று பேசப்படும் பெண்களுக்கே மாப்பிள்ளை கிடைப்பது. மிகவும் கடினமாக இருக்கிறது. இன்னும் பெண் மீது அபாண்டமாக அவதூறு கூறினால் அவளுடைய நிலைமைய சொல்லித்தான் தொியவேண்டுமா?
    இதன் கடுமையை அறிந்த அல்லாஹ் இதை மாபெரும் குற்றமாக கூறியுள்ளான். அவதூறு கூறுபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையானால், அவர்களுக்கு என்பது கசையடி கொடுப்பதோடு இனிமேல் எப்பிரச்சினையாலும் இவாின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவர்கள் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்படவர்கள். மறுமை நாளில் படுபயங்கர வேதனை இவர்களுக்குண்டு. ஆகவே இந்த மோசமான செயலை கனவில் கூட நாம் எண்ணி பார்க்ககூடாது.
    எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் என்பது கசையடி, அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர் தான் பாவிகள் (24:4)
    எவர்கள் மூஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்களுக்கும் கடுமையான வேதனையும் உண்டு. (24:23)”
    அழிக்கக்கூடிய ஏழு விசயங்களை தவிர்த்து கொள்ளுங்கள். என்று நபி(ஸல்) கூறினார்கள். நாங்கள் அவை என்னென்ன என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் சூனியம் செய்தல் நியாயமாகவே அன்றி உயிர்களை கொலை செய்தல். வட்டியின் மூலம் சாப்பிதல் அனாதையின் பொருட்களை சாப்பிடுதல் போர்களத்தில் புறமுதுக காட்டி ஓடுதல் கற்புள்ள பேதை பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
புறம் பேசுதலைத் தடுத்திருந்தாலும் சில நேரங்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன. மக்களை எச்சாிக்கை செய்வதற்காக ஒருவாின் குறையை எடுத்துக் கூறலாம். ஒருவரைப் பற்றி ஆலோசனை கேட்கும் பொழுது, அவரது நிறைகளை எடுத்துக்காட்டலாம். மார்க்கச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்காக ஒருவரைப் பற்றி, அவாின் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கின்றது.
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கோாினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு அனுமதி வழங்குங்கள். இவர் தன்னுடைய கோத்திரத்திலேயே மிகவும் கெட்டவர் என்று கூறினார்கள். நூல்கள் : புகாாி, முஸ்லிம்
    ஒருவரைப் பற்றி இன்னொருவாிடம் இல்லாத ஒன்றைக் கூறி இவருக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்துவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குடும்பங்கள் பிாிந்திருக்கின்றன. எத்தனையோ பேர் கொலை கூடச் செய்யப்பட்டுள்ளனர். இப்படிப் பெரும்பாதிப்பு இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இப்படிக் கோள் சொல்லித் திாிபவர்கள் சுவனம் போக முடியாது. கப்ாில் வேதனை உண்டு என்று இஸ்லாம் மிகவும் கடுமையாக எச்சாிக்கை செய்கின்றது.
இதுவரை அவதூறு பேசினால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று குர்ஆன் மூலமும் ஹதீஸின் மூலமும் தொிந்து கொண்டோம். ஆகவே அவதூறு பேசாமல் நாம் சுவனத்திற்கு செல்ல வழி தேடுவோமாக.
நடுக்கடை A.K.B முஹம்மது ஆாிப் சிங்கப்பூர் 

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.
உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் வினைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’ அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் :புகாரி.
நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: -
முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)
சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: -
ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
முஸலிம்களில் சிறந்தவர்: -
‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.
நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
‘எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.
சுவர்க்கம் செல்ல எளிய வழி: -

‘எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதாரம் : புகாரி.

இஸ்லாத்தின் பார்வையில் அவதூறு கூறுதல்!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு மழுங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில் பிறர் மீது அவதூறு கூறுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய அவதூறுகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகைய அவதிக்குள்ளாகிறார்கள் என்பதைப் பற்றி துளிகூட அக்கரையில்லாமல் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் தமக்கு வேண்டாதவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரியிறைக்கின்றனர்.
ஒரு பெண் விசயத்தில் கூறப்படும் அவதூறானது அவளின் வாழ்க்கையையே சின்னாபின்னமாக சிதைத்து ஒரு மீளமுடியாத நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும். அதுவும் திருமணமாகாத பெண்கள் என்றால் அவளுக்கு மணவாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகிவிடும்.
இத்தகைய கொடுமையான செயலான அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.
அவதூறு கூறுபவர்களுக்கான எச்சரிக்கைகள்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)
‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல்,கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

புறம் பேசுவதன் விபரீதங்கள்!

மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம்  உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
புறம் என்றால் என்ன?
புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு வரைவிளக்கனத்தை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ “ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.
புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற தீமைகள்:
புறம் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அல்லது பேசப்படுகின்ற நபரைப் பொறுத்து தாக்கங்கள் அதிகமாக இருக்கும்.  ஒருவன் கணவன் மனைவியர்களைப் பற்றி ஒவ்வொருவரிடமும் மாறி மாறி புறம் பேசுகின்ற போது அக்குடும்பத்திற்கு பிரச்சனைகளை அல்லது அக்குடும்பத்தைப் பிரித்து விடும் அளவிற்கு அவன் ஆளாகின்றான். இதனால் அந்த குடும்பமே குட்டிச்சுவராகும் அளவிற்கு சென்றுவிடும். இது ஒரு சாதாரண மனிதனைப் பற்றி புறம் பேசுவதைவிட ஆபத்தானதாகும்.
இதே போன்று ஒரு மார்க்க அறிஞரைப் பற்றி மக்களுக்கு மத்தியில் அவரது தனிப்பட்ட குறைகளைப் பற்றி புறம் பேசுகின்ற போது அவரது மற்ற சிறந்த கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். இதன் மூலம் மக்களுக்கு அவ்வறிஞரின் நேரிய பல கருத்துக்கள் மக்களைச் சென்றடையாமல் அவர்கள் நேரான பாதையை விட்டும் வழிதவறிச் செல்வதற்கும் அவ்வாறு புறம் பேசியவன் காரணமாக அமைந்து விடுகின்றான். எனவே மற்றவர்களின் குறைகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதை விட்டும் முற்றாக தவிர்ந்துக் கொள்ள வேண்டும். புறம் பேசுவதனால் ஏற்படுகின்ற இத்தகைய விபரீதங்களுக்குத் துணை போகின்றவர்களாக நாம் ஒருபோதும் ஆகிவிடக் கூடாது.
மறுமையில் மிகப்பெரும் நஷ்டவாளியாக நேரிடும்!
புறம் பேசுவது என்பது மேலே குறிப்பிட்டது போன்று இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதே போன்று மறுமையில் நாம் நன்மைகள் பல செய்திருந்தாலும் ஒரு நன்மைக்கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக்கிவிடக்கூடிய அளவிற்கு தீமை நிறைந்ததாக இருக்கின்றது. மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் புறத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
இந்த அல்-குர்ஆன் வசனத்திற்கும் புறத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? ஏன் அல்லாஹ் மரணித்த சகோதரனின் இறைச்சியை புசிப்பதை புறம் பேசுவதோடு ஒப்பிடவேண்டும்?
ஒரு மனிதன் பிறிதொருவனைப் பற்றி அவன் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க இயலாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.
நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் இவ்வாரான வார்த்தைகள் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும்.  இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக்கூட துளியும் அல்லாஹ்வின் மீது அச்சமில்லாமல் முன்வைக்கக் கூடிய அளவிற்கு ஆளாக நேரிடும். நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும். நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும். நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன (அல்-குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவு படுத்துகின்றது. இதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும். இதனால் நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும். பிறரை புறம் பேசும் வார்த்தையாக இல்லாமல் இருக்கவேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேசவேண்டும். முடியாவிட்டால் மௌனமாக இருக்க முயலவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசம் கொள்கின்றாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்’ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

புறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்!

அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!
புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.
ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.
புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’  என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)
பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். அல்-குர்ஆன் 49:11)
ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்(நூல்: அஹ்மத்)
புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.
2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.
புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புஹாரி.
மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.
2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)
முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.
புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
39:53 “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
39:54 ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)
எனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -

“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார்.அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.
“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)
மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான்.(அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)
அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.

அன்பு சகோதர, சகோதாிகளே அஸ்ஸலாமு அழைக்கும்….
சிறிது நேரம் கிடைத்துவிட்டாலோ, அல்லது இரண்டு பேர் கூடி விட்டால் போதும் மற்றவர்களை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறோம்;. அதுவும் நம்மில் சிலருக்கு அடுத்தவர்களை பற்றி பேசவில்லை என்றால் தலை வெடித்து விடும். அது அடுத்தவர்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்திருக்கிறது என்று நம் அனைவருக்கும் தொியும். ஆனாலும் நாம் புறம் பேசுவதை நிறுத்துகிறேமா என்றால் இல்லை என்பது நாம் அனைவருக்கும் தொிந்த விஷயம்.
இஸ்லாம் புறம் பேசுவதை பற்றி என்ன கூறியிருக்கிறது என்று தொிந்து கொள்வது முஸ்லிமாகிய நம் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யாரேனும் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டவர்
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே, அவர்கள் யார் என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்)மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது
சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம் தவறுகளின் பிறப்பிடமே இந்த நாக்குதான். எனவே நாம் உறுப்புகளில் மிகவும் அஞ்ச வேண்டிய உறுப்பு நாக்குதான் ஆகையால் இந்த நாக்கு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
“அல்லாஹ்வின் தூதரே, என் மீது தாங்கள் மிகவும் பயப்படுவது ஏன்? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தன் நாவை பிடித்துக் கொண்டு இதுதான் (அதிகமாக அஞ்சுவது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் தகபிஃ(ரழி) நூல்: திர்மிதி
அல்லாஹ்வின் தூதரே நாவின் விஷயத்தில் அஞ்சும் நமது நிலை பற்றி சிந்தித்து பாருங்கள் அது மட்டுமல்ல புறம் பேசுதல் தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பது போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக நமக்கு எச்சாிக்கை செய்கிறது.
பிறர் குறைகளை துருவி துருவி ஆராய்பவர்
“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (49:12)”
சிந்தியுங்கள் சகோதரர்களே இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு எந்த மனிதனாவது முன் வருவானா? முன் வருவது இருக்கட்டும் மனதிலாவது நினைப்பானா? அப்படி செய்பவனை நாம் எவ்வளவு கேவலமாக பார்ப்போம். சிந்தியுங்கள் சகோதரர்களே அல்லாஹ்வின் முன் புறம் பேசித்திறியும் அனைவரது நிலையும் அப்படி தான் உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது.
சிந்தித்து பாருங்கள் நாம் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் பேசுவதனால் நமக்கு நாமே எவ்வளவு தீங்கிழைக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க கடமைபட்டிருக்கிறோம். இது தேவைதானா?
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்
“எவாின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர்(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம், அபூதாூத்
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே நமது மார்க்கம் பிறர் நலம் பேனுவதில் எவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்கிறது என்று.
இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்
“ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப் பற்றி நல்லதா அல்லது கெட்டதா என்று சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் அளவிற்கு நரகத்தின் அடிப்பாகத்தில் வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அறிவிப்பாளர் : அபூஹ{ரைரா (ரலி) நூல்;: புகாாி
நரகத்திற்கு செல்வதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் அதிகமாக சாபமிடுதலும் கணவனுக்கு மாறு செய்வதும் ஆகும். இவ்விரண்டு குற்றங்களும் பெண்கள் தான் செய்கிறார்கள். எனவே பெண்கள் தான் நரகில் காணப்படுகிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கீழ்வரும் ஹதீஸ்களில் நமக்கு தொியப்படுத்துகிறார்கள். எனவே பிறரை சபிப்பதும், கணவனுக்கு மாறு செய்வதும் பெண்களை நரகில் கொண்டு போய் சேர்க்கும். எனவே பெண்கள் நாவிற்கு பயப்பட்டு கவனமாக பயன்படுத்தவேண்டும்.
அதிகமாக சாபமிடும் பெண்கள்
“ஒரு நபி(ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது நோன்பு பெருநாளன்று தொழும் இடத்திற்கு வந்து பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது தர்மம் செய்யுங்கள். பெண்கள் சமுதாயமே, உங்களை நரகவாதிகளில் மிக அதிகமானவர்களாக பார்க்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என்று கேட்டார்கள். நீங்கள் சாப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்க்ள என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
தன் சகோதரனிடம் உள்ள குறைகளை பிறாிடத்தில் சொல்வதால் அவன் மனது கஷ்டத்திற்கு ஆளாகிறது. காரணம் இவனை பற்றி நல்ல மதிப்பு கொண்டவன் இக்குறையை கேட்பதால் மதிப்பிழந்து பார்க்கிறான். எனவே இவை புறம் பேசுவது ஆகும். அதே நேரத்தில் அவனிடம் இல்லாத ஒன்றை நாம் பேசும் போது அவதூறு பேசுவது ஆகும். இது போன்றவை சர்வ சாதாரணமாக நம்மிடையே நடக்கிறது. எனவே இது விஷயமாக நாம் மிகவும் எச்சாிக்கையாக இருக்கவேண்டும்.
புறம் என்றால் என்ன?
“புறம் என்றால் என்ன என்பதைபற்றி நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அறிவீர்களாக என கேட்டபோது, அல்லாஹ்வும், அவன் தூதருமோ தவிர மிகவும் அறிந்தவர் என தோழர்கள் கூறினார்கள். (புறம் என்பது) உன் சகோதரன் வெறுப்பதை நீ பேசுவதற்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தால் என்ன கருதுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, நீ சொல்வது அவாிடம் இருந்தால் புறம் பேசி விட்டாய். அவ்வாறு அவாிடம் இல்லை என்றால் அவர் மேல் இட்டு கட்டிவிட்டாய் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்: முஸ்லிம்
ஒருவர் எவ்வளவு தான் தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் தன் நாவின் கெட்ட வார்த்தைகளால் நரகத்திற்கு போய் விடுகிறான், தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை குறைத்துக் கொண்டாலும் தன் நாவை கெட்ட பேச்சுகளில் இருந்து தவிர்த்து கொள்வதால் சுவனம் செல்ல காரணமாக இருக்கிறது என்று பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தொிந்து கொள்ளலாம்.
அதிகமாக அமல்கள் செய்தும் நாவால் துன்பம் தருபவர்
“ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறால் – ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: அஹ்மத், பைஹகீ
புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள் தமது கரங்களினாலே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இன்று மற்றொரு விஷயம் நம் பெண்களிடையே மிகவும் மோசமான நிலை அதுதான் அவதூறு பிறர் மணம் நோகும் என்று சிறிது கூட சிந்தித்து பார்ககாமல் அபாண்டமாக அவதூறு பேவிவிடுகிறார்கள். எதையும் ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.
“அல்லாஹ் உங்கள் மீது தாய்மார்களை கொடுமைபடுத்துவத்தையும் பெண் மக்களை உயிரோடு புதைப்பதையும் அனுமதித்தவற்றையும் தடை செய்வதையும் தடை செய்து விட்டான். மேலும் இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது என்று கூறுவதையும், அதிகம் கேள்வி கேட்பதையும் பொருளை வீணடிப்பதையும் வெறுக்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள்.” அறிவிப்பவர்:  முகீரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
ஒரு பெண் விஷயத்தில் சொல்லப்படும் அவதூறு அவளின் வாழ்க்கை நிரந்தரமாக பாழ் ஆகிவிடும். நல்ல பெண் என்று பேசப்படும் பெண்களுக்கே மாப்பிள்ளை கிடைப்பது. மிகவும் கடினமாக இருக்கிறது. இன்னும் பெண் மீது அபாண்டமாக அவதூறு கூறினால் அவளுடைய நிலைமைய சொல்லித்தான் தொியவேண்டுமா?
இதன் கடுமையை அறிந்த அல்லாஹ் இதை மாபெரும் குற்றமாக கூறியுள்ளான். அவதூறு கூறுபவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையானால், அவர்களுக்கு என்பது கசையடி கொடுப்பதோடு இனிமேல் எப்பிரச்சினையாலும் இவாின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். இவர்கள் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்படவர்கள். மறுமை நாளில் படுபயங்கர வேதனை இவர்களுக்குண்டு. ஆகவே இந்த மோசமான செயலை கனவில் கூட நாம் எண்ணி பார்க்ககூடாது.
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் என்பது கசையடி, அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர் தான் பாவிகள் (24:4)
எவர்கள் மூஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்களுக்கும் கடுமையான வேதனையும் உண்டு. (24:23)”
அழிக்கக்கூடிய ஏழு விசயங்களை தவிர்த்து கொள்ளுங்கள். என்று நபி(ஸல்) கூறினார்கள். நாங்கள் அவை என்னென்ன என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் சூனியம் செய்தல் நியாயமாகவே அன்றி உயிர்களை கொலை செய்தல். வட்டியின் மூலம் சாப்பிதல் அனாதையின் பொருட்களை சாப்பிடுதல் போர்களத்தில் புறமுதுக காட்டி ஓடுதல் கற்புள்ள பேதை பெண்கள் மீது அவதூறு கூறுதல்.” அறிவிப்பவர்: அபூஹ{ரைரா(ரழி) நூல்கள்: புகாாி, முஸ்லிம்
புறம் பேசுதலைத் தடுத்திருந்தாலும் சில நேரங்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன. மக்களை எச்சாிக்கை செய்வதற்காக ஒருவாின் குறையை எடுத்துக் கூறலாம். ஒருவரைப் பற்றி ஆலோசனை கேட்கும் பொழுது, அவரது நிறைகளை எடுத்துக்காட்டலாம். மார்க்கச் சட்டம் என்ன கூறுகிறது என்பதை அறிவதற்காக ஒருவரைப் பற்றி, அவாின் குறைகளை எடுத்துக் கூறலாம். இதற்கு இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்கின்றது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கோாினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவருக்கு அனுமதி வழங்குங்கள். இவர் தன்னுடைய கோத்திரத்திலேயே மிகவும் கெட்டவர் என்று கூறினார்கள். நூல்கள் : புகாாி, முஸ்லிம்
ஒருவரைப் பற்றி இன்னொருவாிடம் இல்லாத ஒன்றைக் கூறி இவருக்கு மத்தியில் சண்டையை ஏற்படுத்துவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குடும்பங்கள் பிாிந்திருக்கின்றன. எத்தனையோ பேர் கொலை கூடச் செய்யப்பட்டுள்ளனர். இப்படிப் பெரும்பாதிப்பு இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதில்லை. இப்படிக் கோள் சொல்லித் திாிபவர்கள் சுவனம் போக முடியாது. கப்ாில் வேதனை உண்டு என்று இஸ்லாம் மிகவும் கடுமையாக எச்சாிக்கை செய்கின்றது.
இதுவரை அவதூறு பேசினால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று குர்ஆன் மூலமும் ஹதீஸின் மூலமும் தொிந்து கொண்டோம். ஆகவே அவதூறு பேசாமல் நாம் சுவனத்திற்கு செல்ல வழி தேடுவோமாக.

முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி. மற்றவர் பொடுப்போக்கானவர். இந்த வணக்கசாலி சதாவும் மற்ற வருக்கு உபதேசம் செய்து வந்தார். ஒருநாள் அந்த மனிதர் இவரைப் பார்த்து. "என்னைக் கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்ப வில்லை. நீ உன் வேலையைப்பார்" என்றான். இதைக் கேட்ட அந்த இபாதத்தாளி. "நிச்சயமாக! அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான்" என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இருவரும் நிறுத்தப்படும் போது. அல்லாஹ் அந்த பொடுப்போக்கானவரை மன்னித்து இபாதத்தாளியைப் பார்த்து. " நான் மன்னிக்க மாட்டேன்" என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறதுஉன் அமல்களை நான் அழித்து விட்டேன்" என்று கூறி நரகுக்கு அனுப்புவான்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஜுந்துப்(ரலி)
நூல்: முஸ்லிம்

யார் அல்லாஹ்வையும். மறுமை நாளையும் உண்மையாக நம்புகிறாரோ அவர் பேசினால் நல்லதைப்பேசட்டும் இல்லையென்றால் மௌனமாக இருக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: இப்னு மாஜா -3971

புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)

பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)

அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)

நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)

நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)

உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)

ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)

மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)

வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)

நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)

கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)

கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)

இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும்

நாம் நாவை காக்கவில்லையென்றால்...?????

................................................................?????

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!


No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...