Friday, September 26, 2014

நபிகளாரின் பொன்மொழிகள் ஸஹீஹுல் புகாரி ஒலித்தட்டு


இன்றைய புதுவரவு...
நபிகளாரின் பொன்மொழிகள் ஸஹீஹுல் புகாரி.
அனைத்து ஹதீஸ்களும் அடங்கிய ஒலித்தட்டு.
விலை: ரூ 55.
தொடர்புக்கு : 044 2499 7373 \ 94440 25000


எங்களிடம் விற்பனைக்கு கிடைக்கும் புத்தகங்கள்...

ஸஹீஹுல் புகாரீ 7 பாகங்கள் தமிழாக்கம் = ரூ. 350/- பாகம் (ஒரு செட் ரூ. 2450/-)

ஸஹீஹ் முஸ்லிம் 4 பாகங்கள் தமிழாக்கம் = ரூ. 300/பாகம் (ஒரு செட் ரூ. 1200/-)























சுனன் நஸாயீ முதல் பாகம் = ரூ. 350.00/-

முஸ்னது அஹ்மத் முதல் பாகம் = ரூ. 350.00/-


தஃப்ஸீர் இப்னு கஸீர் 6 பாகங்கள் = ரூ. 350/ பாகம் (6 பாகங்களுக்கு ரூ. 2100)


தொடர்புக்கு: 044-2499 7374, 720005 7374. 96001 25000, 95515 72972



ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்
21/11, இரண்டாவது பிரதான சாலை, சி.ஐ.டி. காலனி.
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி : 044 24997374, 9171 84 61 84, 96001 25000
http://www.rahmath.org/index.php
http://www.rahmath.net/















மனைவி

திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 4]
நீங்கள் ஒரு மனைவி(யை விவாகரத்துச் செய்துவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)கொள்ள விரும்பினால், அவளுக்கு நீங்கள் ஒரு பொருள் குவியலையே (மஹ்ராகக்) கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள். (அவர்கள்மீது) வீண்பழி சுமத்தியும் வெளிப்படையான பாவம் புரிந்தும் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா?

(அல்குர்ஆன்: 4:20)

மழை பெய்தது

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்துவிட்டது, மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்திப் பிரார்த்தித்தனர்.
நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளியேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர், பாதைகள் அடைபட்டு விட்டன. என்று கூறினார்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 1029.

தர்மம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை; தமது வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும் தர்மமாக ஆக்கிவிட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.

அறிவிப்பாளர்: ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 2739.

தொழுகை

யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவர் போன்றவர் ஆவார்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதி, பாகம்:1 ஹதீஸ் எண்: 160.


இஃதிகாப்

நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்துவந்தார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் துணைவியர் இஃதிகாப் இருந்தனர்.

அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 2026.


வெள்ளிக் கிழமை

வெள்ளிக் கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும்போது ஒருவர் (பேசிக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம்) ‘நீ மௌனமாக இரு’ என்று கூறினாலும் அவர் வீண் பேச்சு பேசியவர் ஆவார்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதி, பாகம்:1 ஹதீஸ் எண்: 470.



வெள்ளிக்கிழமை அன்று ஒருவர் குறிக்கிறார், தம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்தக்கொள்கிறார், தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தமது வீட்டிலுள்ள நறுணைத்தைத் தடவிக் கொள்கிறார், பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்து (சேர்ந்து உட்கார்ந்திருக்கும்) இருவப் பிரிக்காமல் தமக்கு எழுதப்பட்டுள்ளதைத் தொழுகிறார், பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியுறுகிறார் எனில், அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையில் ஏற்படும் பாங்கள் அவருக்கு மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.

அறிவிப்பாளர்: சல்மான் அல்ஃபார்சீ (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 883.

அறிவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் ஒரு பால் கோப்பை கொண்டுவரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் என் நகக்கண்கள் ஊடே (பால்) வெளிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.
மக்கள், “இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, அதற்கு அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 82.

பொறாமை

இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல், இன்னொரு மனிதர் தமக்கு அல்லாஹ் வழங்கிய ஞானத்தால் (மக்கள் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக் கொண்டும் (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 73.

மறுமை

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, “அந்ததோ! நான் இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:5 ஹதீஸ் எண்: 7115.

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள் அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள்.

அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 1896.


திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 3]
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும்; இன்னும் சில முகங்கள் கறுப்பாக இருக்கும். யாருடைய முகங்கள் கறுப்பாக இருக்குமோ அவர்களிடம், “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு (இறைவனை) மறுத்தீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்” (என்று கூறப்படும்). யாருடைய முகங்கள் வெண்மையாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 3:106,107)

ஆடை

நீங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணியுங்கள். அதுவே உங்கள் ஆடைகளில் மிகவும் சிறந்ததாகும். உங்களில் இறந்தோருக்கும் அதையே அணிவியுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 915


நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...