Friday, September 26, 2014

மறுமை

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, “அந்ததோ! நான் இவரது இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?” என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:5 ஹதீஸ் எண்: 7115.

சொர்க்கத்தில் ‘ரய்யான்’ எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும் உடனே அவர்கள் எழுவார்கள் அவர்களைத் தவிர வேறு யாரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு யாரும் நுழையமாட்டார்கள்.

அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 1896.


திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 3]
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும்; இன்னும் சில முகங்கள் கறுப்பாக இருக்கும். யாருடைய முகங்கள் கறுப்பாக இருக்குமோ அவர்களிடம், “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு (இறைவனை) மறுத்தீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்” (என்று கூறப்படும்). யாருடைய முகங்கள் வெண்மையாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 3:106,107)

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...