Friday, September 26, 2014

அறிவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் ஒரு பால் கோப்பை கொண்டுவரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் என் நகக்கண்கள் ஊடே (பால்) வெளிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள்.
மக்கள், “இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, அதற்கு அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 82.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...