Friday, September 26, 2014

மழை பெய்தது

ஒரு வெள்ளிக்கிழமை அன்று கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (கடும் வறட்சியால்) கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்துவிட்டது, மக்களும் அழிந்தனர்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து கைகளை உயர்திப் பிரார்த்தித்தனர்.
நாங்கள் பள்ளிவாசலைவிட்டு வெளியேறவில்லை. அதற்குள் எங்களுக்கு மழை பெய்தது. மறு வெள்ளிக்கிழமை வரும்வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பயணிகள் முடங்கிவிட்டனர், பாதைகள் அடைபட்டு விட்டன. என்று கூறினார்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).
நூல்: ஸஹீஹுல் புகாரீ, பாகம்:1 ஹதீஸ் எண்: 1029.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...