Friday, July 11, 2014

வட்டி என்றால் என்ன ?



வட்டி என்றால் என்ன ?

https://www.facebook.com/allahoruvann

வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.


வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு

பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில் நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.

2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)

இஸ்லாத்தின் பார்வையில் வட்டி

வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

வட்டி பெரும் பாவங்களில் ஒன்று

வட்டியை பெரும் பாவங்களின் பட்டியலில் இஸ்லாம் வைக்கிறது.வட்டி பெரும் பாவம் என்று அறிந்தே மக்கள் சர்வ சாதாரணமாக சிறிதும் பயமில்லாமல் வெளிப்படையாக வட்டி வாங்குவதை பார்க்க முடிகிறது.பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)
புஹாரி 6857

வட்டியில் அல்லஹ்வின் அருள் இல்லை


ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.நம்முடைய தேவைகள் அனைத்தும் சிறிய உழைப்பிலோ அல்லது சிறிய அளவிலான செல்வதிலோ பூர்த்தி ஆகிவிட்டால் அதை அருள் என்று கூறலாம்.கோடி கோடியாக செல்வம் இருந்தும் அந்த செல்வத்திற்கு மேல் அவனுடைய தேவை இருந்தால் அந்தாள் செல்வதில் அருள் இல்லை என்றே அர்த்தம்.இப்படிப் பட்ட அருளை அல்லாஹ்வால் மட்டுமே கொடுக்க முடியும்.அல்லாஹ்விடம் அதிக செல்வதை கேட்பதை விட அல்லாஹ்வின் அருளை கேட்பதே சிறந்தது.அல்லாஹ்வே தேவையை உண்டாகுகிறான் ஆகையால் அவனிடமே அதை கேட்க வேண்டும்.அல்லாஹ் அந்த தேவையை வேறு வழியில் நிறைவேற்றுவான் அல்லது அவனது வல்லமையினால் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அந்த தேவையே இல்லாமல் ஆகிவிட போதுமானவன்.

வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.

2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ
அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)

30:39 وَمَا آتَيْتُم مِّن رِّبًا لِّيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِندَ اللَّهِ ۖ وَمَا آتَيْتُم مِّن زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُضْعِفُونَ
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன் 30:39)

வட்டி மறுமையின் நிலை

மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

4:161 وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085

வட்டி சாபத்திற்கு உரியது

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
புஹாரி 5347

மற்ற மனிதர்களின் சபிப்பதர்க்கும் நபிமார்கள் சபிப்பதர்க்கும் வேறுபாடு உண்டு.நபிமார்கள் ஒரு விஷயத்தை மார்க்கம் என்று கூறினால் அது அல்லாஹ்வின் புறத்தே வருகிறது என்று தான் அர்த்தம்.அதே போல் ஒரு செயலை நபிமார்கள் சாபமிட்டால் அதை அல்லாஹ் சபிக்கிறான் என்று தான் புரிந்துக் கொள்ள வேண்டும்.வட்டி சாபத்திற்கு உரியது என்பதை மேலுள்ள ஹதீஸிலிருந்து நாம் விளங்க முடிகிறது.

ஃபிரான்சும் வட்டி கலாச்சாரமும்

உலகில் உள்ள பல நாடுகள் வட்டியை மையமாக கொண்டே இயங்கி வருகின்றது.அதில் பிரான்ஸ் நாடு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாம் கடையில் வாங்கும் சிறு பொருள் முதல் நாம் வாங்கும் வீடு போன்றவைகள் வரை இந்த நாட்டில் வட்டி எங்கும் நிறைந்திருக்கிறது.வட்டி வாங்குவது இஸ்லாத்தில் ஹராம் என்று வைத்திருந்தும் தங்களின் பணத்தை பெருக்கிக் கொள்வதர்காகவும் சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காகவும் பலர் வட்டி விழுந்து விடுகின்றனர்.வட்டி வாங்காமல் இந்த நாட்டில் வாழவே முடியாது ஆகையால் நிர்பந்தத்தின் அடிப்படையில் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று சில இஸ்லாமிய மார்க்கக அறிஞர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளக் கூடியவர்கள் பத்வாவும் கொடுத்திருக்கின்றனர்.நாம் ஒரு செயயலை செய்யா விட்டால் உயிர் வாழவே முடியாது போன்ற நிலை ஏற்பட்டால் அதை நிர்பந்தம் என்று கூறலாம்.இவர்கள் வட்டி வாங்குவதை நிர்பந்தம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.இவர்கள் எந்த காரணத்தை வைத்து வட்டி நிர்பந்தம் என்று கூறுகிறார்கள் என்பதையும் அதற்க்கு என்ன தீர்வு என்பதையும் பார்போம்.

பிரான்ஸ் நாட்டில் வட்டியை வாங்குவதயும் கொடுப்பதயும் முக்கியமான நான்கு காரணங்களாக பிரிக்கலாம்

பொருட்களை தவணை முறையில் வாங்கும்போதுள்ள வட்டி

விலை அதிகமான பொருட்களை அதிகமானோர் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக தவணை முறையில் சிறிய தொகையை மாதா மாதம் கட்ட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருட்கள் விற்கப் படுகிறது.இந்த முறையே இன்ஸ்டால்மென்ட்(Installment) என்று அழைக்கப் படுகிறது.ஒரு பொருளை முழு தொகைக் கொடுத்து வாங்கும்போதும் இன்ஸ்டால்மென்டில் வாங்கும்போதும் அதன் தொகை மாறாமல் இருந்தால் எந்த குழப்பமும் இல்லை அதை இஸ்லாம் தடுக்க வில்லை.ஆனால் நீங்கள் தவணை முறையில் கொடுக்கும் தொகையை கூட்டி பார்த்தல் அந்த பொருளின் முழுத் தொகையின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்.ஒரு பொருள் நம்மிடம் குறிப்பிட்ட காலம் இருப்பதற்காக ஒரு தொகையை தனியாக செலுத்துவது வட்டியின்றி வேறில்லை.இதற்க்கு இரண்டு தீர்வுகள் உள்ளன :

முழு தொகையை கொடுத்து அந்த பொருளை வாங்குதல் .
சில நேரங்களில்,தவணை முறையில் செலுத்தும் தொகையும் தவணை இல்லாமல் செலுத்தப்படும் முழு தொகையும் சமமாக இருக்கும்(sans frais).அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் வட்டியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.


வங்கிகளிலிருந்து பெறப்படும் வட்டி

ஒருவருடைய வங்கிக கணக்கின் தொகையை பொருத்தும் அந்த தொகை எவ்வளவு காலம் அந்த வங்கியின் கணக்கில் இருக்கிறது என்பதை பொருத்தும் ஒரு கணிசமான தொகை அந்த வங்கியில் உள்ள நம்முடைய தொகையோடு சேர்க்கப் படுகிறது,இந்த தொகையானது வட்டிதான் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.வட்டியை மூலதனமாக கொண்டு இயங்கும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் முக்கியமாக இரண்டு காரணங்களுக்காக இதை விரும்புகிறார்கள்.

செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்காக : வங்கியில் பணம் இருந்தால் அதிலிருந்து வட்டி வரும் அதன் மூலம் நம் செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பலர் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.இப்படி பெறப்படும் செல்வம் வட்டி தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் அல்லாஹ்வுடைய கடும் தண்டனையையும் நரக நெருப்பையும் அஞ்சிக் கொள்ள வேண்டும்.நம்மை சுற்றி இருக்கின்ற பல மக்கள் இந்த பாவத்தை செய்து கொண்டு இருக்கின்றனர் என்பது தான் பரிதாபத்திற்குரிய நிலை.

பாதுகாப்பு : வீட்டில் பணம் வைத்திருப்பதை விட வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தினால் பலர் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர்.இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் தான்.ஆனால் இதன் மூலம் வரும் வட்டியை என்ன செய்வது ? என்ற கேள்வி எழுகிறது.சிலர் அந்த வட்டி தொகையை எடுத்து வேறு யாருக்காவது(ஏழைகளுக்கு) கொடுத்து விடலாம் என்றும் சிலர் அந்த தொகையை அந்த வங்கியிலேயே விட்டு விடுவது நல்லது என்று இரண்டு தீர்வுகள் நமக்கு முன்வைக்கப் படுகிறது.இதில் இரண்டாவது தீர்வே சிறந்தது.ஏனெனில் அந்த வட்டி பணம் நம்முடைய பணம் இல்லை என்ற போது அதை நம்மால் எப்படி நம் இஷ்டம் போல் அதை பயன் படுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது.

வாகனம் வாங்குவதில் வட்டி

வாகனம் வாங்குவதற்கு பெரிய தொகை தேவை என்பதாலும் முழுத் தொகையை செலுத்தினால் வருமான வரி(Income Tax) போன்ற சிக்கல் இருப்பதால் அதிகமானோர் தவணை முறையிலேயே வாகனம் வாங்குகின்றனர்.இந்த தவணை முறை என்பது வட்டி தான் என்பதை ஏற்கனவே நாம் விளக்கி விட்டோம்.இந்த பிரச்சனைக்கும் இரண்டு தீர்வுகளை முன்வைக்கலாம் :

பயன்படுத்திய வாகனத்தை வாங்கினால் அதன் விலை குறைவாக இருக்கும்.அந்த வகையில் முழுத் தொகையை செலுத்தி அந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம்.
வட்டி செலுத்தி தான் வாகனம் வாங்க வேண்டும் என்று இருந்தால் வாகனமே தேவை இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட வேண்டியதுதான்.வாகனம் இல்லாமல் வாழவே முடியாது என்று எவராலும் கூற முடியாது.அவர்களுடைய ஆசையையும் சொந்த வாகனம் இருந்தால் உள்ள சவுகரியத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்தால் உலகிலோ மருமையிலோ இதை விட சிறந்ததை அல்லாஹ் நமக்கு கொடுப்பான் என்று நம்புவதுதான் நமது ஈமானை பாதுகாக்கும் முறையாகும்.


வீடு வாங்குவதில் வட்டி

வாகனத்திற்கு நாம் கூறியது வீடு வாங்குவதிர்க்கும் பொருந்தும்.வட்டி இல்லாமல் நமக்கு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்றால் வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது தான் நமது ஈமானை காப்பாற்றும் வழி முறையாகும்.நம்முடைய சொகுசான வாழ்விற்காக இஸ்லாத்தை மறந்து வட்டி கொடுத்து வீடு வாங்குவோர் சற்று ஃபிரவ்னுடைய மனைவி கூறியதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் "இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! (அல் குர் ஆன் 66:11)

நகை அடமானம்

சிலர் தங்களது அவசர தேவைக்காகவும் ,அனாவசிய அனாச்சரங்களுக்காகவும் தங்களது நகைகளை வங்கியிலோ வட்டிகடையிலோ அதன் மதிப்பைவிட குறைந்த தொகைக்காக அடமானம் வைக்கிறார்கள்.பின்பு அதற்கு வட்டியும் கட்டி பின்பு அதை மூழ்கவும் செய்து விடுகிறார்கள்.தன்னுடைய நகைக்கு தானே முட்டாள்தனமாக பணம் செலுத்துகிறார்களே..இவர்களை என்னவென்று சொல்வது ? தனது தேவைக்கு மட்டும் நகையை விற்று விட்டு பின்பு வாங்கிக்கொள்ளலாம் என்ற சிந்தனை கூட இவர்களிடம் இல்லை.அல்லாஹ் உங்களை சோதித்து பார்பதற்காக ஒரு அவசர தேவையை உண்டாக்குகிறான் என்று தெரியாமல் அடமானம் என்ற பெயரில் நரகப்படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள்.

ஏலச்சீட்டு

ஏலசீட்டில் இரண்டு முறைகள் உள்ளது.முதலாவது மாதா மாதம் ஆளுக்கு ஒரு தொகை உதாரணமாக 100€ கட்டுவார்கள் பின்பு பணத்தேவை அல்லது குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு மொத்த தொகையில்(1000€ ல்) கழிப்பு போக அதாவது வட்டி போக மீதம் உள்ளதை (900€) கொடுப்பார்கள் , இதில் கழிப்பு தொகையை (100€)என்பதுதான் அதை நடத்துபவரின் லாபமாகும் ,அவர் வட்டி வாங்குகிறார் மற்றவர்கள் வட்டி கொடுக்கிறார்கள் இரண்டும் நரகத்திற்கு இழுத்துச்செல்லும் நேரடியான வட்டியாகும்.எனவே இதில் கலந்துக் கொள்ளக் கூடாது.

ஒரு சிலர் கூட்டாக சேர்ந்து கழிப்பு ஏதும் இல்லாமல் எந்த ஆதாயம் இல்லாமலும் செய்கிறார்கள் இதில் எதுவும் தவறில்லை.



வட்டியினால் ஏற்படும் விளைவுகள்


நம்முடைய தேவைக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக பலர் வட்டிக்கு பணம் வாங்குகின்றனர்.வட்டிக்கு பணம் கொடுக்கக் கூடியவர்கள் கடன் கொடுக்கும்போது சிரித்த முகத்தோடும் நட்போடும் பழகுவார்கள்.அந்த பணத்தை திருப்பி கொடுக்க தாமதமானலோ அல்லது தொகையை குறைத்து கொடுத்தாலோ அவர்களுடைய சுய ரூபம் வெளிப்படுவதை காண்கிறோம்.இவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கினால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது,அசிங்கமான வார்த்தைகளை கொண்டு கொச்சைப் படுத்துவது போன்ற இன்னல்களுக்கு ஆளாக வேண்டி வரும்.வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம்.அதுமட்டுமா கடன்காரர்களால் தம் மனைவியின் கற்பை இழந்த கதையும் சமீபத்தில் நடந்தேறியது.இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒரு தீய செயலை செய்தால் இப்படிப்பட்ட கேவலங்களுக்கும் அசிங்கங்களுக்கும் ஆளாக வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.வட்டியினால் உலகிலும் கெடும் மறுமையிலும் கேடு என்பதை மக்கள் என்று உணரப் போகிறார்களோ?


நாட்டுக்கும் கேடு : ஒருவன் தொழில் தொடங்கும்போது தன் சொந்த செலவில் அந்த தொழிலை துவக்கினால் அவன் உற்பத்தி செய்யும் பொருளில் கணிசமான லாபத்தை வைத்து விற்கப்படும்.ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி ஒரு தொழிலை ஆரம்பித்தால் உற்பத்தி செய்யும் பொருளில் லாபம் மட்டும் இல்லாமல் அவன் கொடுக்க வேண்டிய வட்டித் தொகையையும் சேர்த்துதான் அந்த பொருளை விற்க வேண்டிய சூழ்நிலையில் அவன் தள்ளப் படுவான்.அந்த வியாபாரி செலுத்த வேண்டிய வட்டிப் பணத்தை அந்த பொருளை வாங்குபவர்கள் மீது திணிக்கப் படுகிறது.இப்படி வட்டிக்கு வங்கி தொழில் செய்வதால்தான் விலை வாசி அதிகரிக்கிறது.


இந்தியா போன்ற நாடுகள் உலக வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கி இப்போது நாட்டில் வரும் வருமானத்தில் கால்வாசிக்குமேல் உலக வங்கியில் பெற்ற கனுக்காக வட்டி தொகையை செலுத்தி வருகிறது.வட்டிக்கே இந்த நிலைமை என்றால் அசலை எப்போது கொடுப்பது?சமீபத்தில் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கும் வட்டி தான் மூலக் காரணம்.பல வங்கிகள் இழுத்து மூடப்பட்டன,இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்த நிலையையும் நாம் பார்த்தோம்.இதெல்லாம் நடந்தும் கூட உலக நாடுகள் திருந்துவதாக தெரியவில்லை.


வட்டிக்கு என்ன தீர்வு?

வட்டி இல்லாத வங்கி தான் இதற்க்கு தீர்வாக அமைய முடியும்.முஸ்லிம்கள் அனைவரும் அல்லது அதிகமானோர் வட்டி வாங்குவதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டாலே வட்டி இல்லா வங்கி அதிகரிக்கும்.வட்டி இல்லாத பொருளாதார அமைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் இந்த பொருளாதார தேக்கம் சிறிய அளவிலேயே காணப் பட்டது.இதற்க்கு ஒரு சிறிய முயற்சியாக பைத்துல் மால் போன்ற செயல்முறையை நடை முறைப்படுதலாம்.பைத்துல் மால் என்பது வட்டி இல்லா சிறிய வங்கியை போல் இயங்கக் கூடியதாகும்.பணத்தை பாதுகாப்பாக சேமிப்பதும் பணத் தேவை உடைய மக்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுப்பதும் மக்கள் செலுத்தும் ஜகாத் வரிகளை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதும் பைத்துல் மாலின் முக்கிய பணிகளாகும்.இந்த செயல்முறையின் மூலமாக வட்டியிளிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் கடன் தேவை உள்ளவர்களுக்கும் கடன் கொடுக்கலாம் அதுமட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கும் உதவ முடியும்.வேறு எந்த (மத) சமூகத்திலும் இல்லாத இந்த இனிய முறையை செயல் படுத்துவதின் மூலம் மற்றவர்களுக்கு நாம் ஒரு எடுத்துக் காட்டாக திகள முடியும்.


நீங்கள் வட்டி வாங்குபவரா ?

மரணத்திற்கு முன் மனிதன் செய்யும் தவறை அவன் திருந்தி பாவமன்னிப்பு கேட்டால் அதை மன்னிக்க அல்லாஹ் தயாராக இருக்கிறான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை .வட்டி வாங்கக் கூடியவர்கள் அவர்கள் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு எஞ்சியுள்ள வட்டியை வாங்காமால் விட்டுவிட்டால் அவர்கள் வெற்றி அடைவார்கள் என்று அல்லாஹ் தன திருமறையிலே கூறுகிறான்.எனவே என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே அல்லாஹ் தடுத்துள்ள இந்த வட்டியை விட்டு விட்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டு இனியாவது நரக நெருப்பிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

2:278 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)



===========

1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279)
இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130)
2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275)
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.
2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.
3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன்.
5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)
நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான்.
7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள்.
8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275)
2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962)
3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும்.
நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது.
'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும்.( இந்த விசயத்தில் IEST "வட்டியால் வட்டியை ஒழிப்போம்" செயல் திட்டத்தை பயன் படுத்தி வட்டியை ஒழிக்கும் இன்ஷாஅல்லாஹ்)
12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது.
15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது.
17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது.எனவே வட்டியை ஒழித்து கட்ட IEST மூலம் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி செய்வோம் அல்லாஹ் உதவி செய்வான்.
என்றென்றும் அன்புடனும் பாசத்துடனும் 


=============

உணரப்படாத தீமை: வட்டி
அப்துல்லாஹ்
  
    இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.
    தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.
    அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.
    இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.
    ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:
         يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
    ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)
    الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
   யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்)  ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள்;  இதற்குக் காரணம் அவர்கள், "நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே" என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும்  தங்கிவிடுவார்கள். (2:275)
    يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ   ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)
    فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ
    இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)
    உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
    மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.
    வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்
    இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை  அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்
1.  குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.
2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.
3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.
4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)
    வட்டி என்றால் என்ன?
    بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ   
    தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)
    மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில்  நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.
     வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்
    தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும்,  தொலிக்கோதுமையை  தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள்  பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)
    நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது  நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)
    வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)
    வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
    மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
    இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும்  நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர  வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.
يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ  அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)
    நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க  முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)
    எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

=============

அ. வட்டி என்றால் என்ன?
ஆ.நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன?
இ. இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா..? அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்ததா?
இவற்றிற்கான பதில்களை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.  முதலில் குர்ஆன் வட்டி என்று எதைக் குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.
வட்டியின் வகைகள் ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை:
வியாபாரம் வட்டியைப் போன்றதே… என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்குப் பலர் தங்கள் பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து “அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்’ என்கிறான். 2:275
வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் “இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதையே கருத்தில் கொண்டிருந்தார்கள்’; இறைவன் இதை மறுக்கிறான். என்ன காரணம்? வியாபாரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும்-இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்ட தாகும்.
பணம் பொருளாக மாறும்போது அது உற்பத்திப் பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும்போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமில்லாமல் பணம் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையையும் உரு வாக்கி விடுகிறது. பொதுவாகச் செல்வம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.
உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.
(அல்குர்ஆன் : 59:7)
பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும் போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கிக் கிடப்பதை இயல்பாகக் கொண்டு விடும். பான் புரோக்கர் வகையறாக்கள் இதற்கு உதாரணம்.தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும்; வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்து விட முடியும். இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவும் பணம் முடக்கப்படுவதால் பணவீக்கம் அதிகமாகி எத்தனையோக் கெடுதிகள் முளைத்து நிற்கின்றன.
பணம் கொடுத்துக் கூடுதல் பணம் பெறுவதே இங்கு வட்டியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம்.
வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையைக் கொடுத்து விட்டு அதை திரும்பப் பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டி பெறும் முறை “வட்டி முறைகளில்’ ஒன்றாக இருக்கிறது. அதை இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்து விட்டான்.
தொடர் வட்டி:
இறை நம்பிக்கையாளர்களே! பல மடங்காகப் பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல்குர்ஆன் : 3:130)
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. (அல்குர்ஆன் : 30:39)
இவை தொடர் வட்டிக்கு எதிராக இறங்கியவையாகும். “பல மடங்காகப் பெருகும் நிலையில்’ என்பது சேமிப்பு-முதலீட்டின் மீதானத் தொடர் லாபத்தைக் குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத் தன்மையாகும். ஒரு பொருளுக்கு விற்பனையின்போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை. தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாட்டின் அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றது.
நான் உனக்கு ரூ.1000 கொடுப்பேன்; அதைத் திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகளாவிய வலையைப் பின்னிப் பல நாடுகளைச் செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டி முறை மிகப் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர்ப் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்தச் சமாதான வார்த்தைகளாலும் நியாயப்படுத்தவே முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
அடுத்து,
வங்கி-வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு, அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும்-ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதைப் பார்ப்போம்.
வங்கியும் – வட்டியும்,
வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பின்னிக் கொண்டு தன்னுடைய பணியைத் துவங்குகிறது. இதன் பணி முதலீட் டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் குடி, நடுத்தர வர்க்கம், வறுமைக்கோடு என்று வாழும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அவர்க ளின் தேவைக்குப் பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்வதாகும்.
பணம் கொடுத்துக் கூடுதலாகப் பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா? என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயம், தொழில், வீட்டு வசதி போன்ற தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கி யில் கையிருப்பு என்பது மிகக் குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக,
அன்னியச் செலாவணி அறவே இல்லாத, உள்நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொள்வோம். இதில் அன்னியச் செலாவணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த மூதலீட்டையும் கடனாகக் கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பின்னடைவை அடைந்து விடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயைப் பெருக்கிக் கொள்ளவே செய்யும்.
அன்னியச் செலாவணியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும். வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்புக் குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு வங்கி விவசாயம், தொழில், வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன? விவசாயத்திற்கென்று விவசாயிகள் ஐம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் ஐநூறு ஆயிரம் கோடிகளாகும்.
தொழில், வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல், திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளைத் தொடும்.
இந்நிலையில் பணம் கொடுத்துப் பணம் பெறுவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூலதனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதைச் சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும், பெரும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்குச் சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங் கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.
லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் பணத்தைப் பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை “ஹராம்’ என்று கூறுவது முறையல்ல என்றே கருதலாம். “தவிர்த்துக் கொள்ளுதல்’ என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம். இஸ்லாம் “தவிர்த்துக் கொள்ளுதல்’ என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1. விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதைத் தவிர்த்துக் கொள்ளுவது.
2. ஒன்றின் மீது சந்தேகம் வரும்போது அதைத் தவிர்த்து விடுவது.
நம் சொந்தத் தேவைக்காக வங்கியில் சேமிக்கப் படும் பணத்திற்கு மேலதிகமாகக் கிடைக்கும் தொகை “வட்டியோ’ என்று சந்தேகம் வரும்போது அத்தகைய பணத்தை தன் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே “தவிர்த்துக் கொள்ளுதல்’ என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.
வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டி பெறுகிறது என்று தெளிவாக நிரூபிக்கப்படாத வரை அது மேலதிகமாகக் கொடுக்கும் தொகையின் மீது “சந்தேகம்’ மட்டுமே நிலைத்திருக்கும்.
“ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது, இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமான வையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டவராவார்’ என்பது நபி மொழி.(புகாரி)
இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாகச் சிந்தித்து விளங்க வேண்டும். இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன. அதைக் கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்து கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது. நபி(ஸல்) அவர்கள் தூதுத்துவப் பணியைச் செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றையக் காலத்திற்குத் தேவையான அனைத்துச் சட்டங்களும் “தெளிவாக’ அறிவிக்கப்பட்டன. ஹராமோ, ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால், “இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேக மானவையும் உண்டு’ என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்தையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதாரத் திட்டம், வழக்கம், பொருள் மாற்று வழி முறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தைக் கண்டு விட்டன. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்து பொருளாதாரப் பார்வை மற்றும் செயல்பாடுள் அனைத்தும் தலை கீழ் மாற்றமாகிப் போயின. ஊர்ச் சந்தை வியாபாரம் என்ற நிலை உலகச் சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிறுவனங்கள் உலகில் முளைத்து தம் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வாழ்பவர்கள் புதியப் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெறுவதிலும், கொடுப்பதிலும் புதியப் பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்தப் பொருளாதார வழிகளை எப்படிக் கையாள்வது என்பதில் அவர்களுக்குச் சந்தேகம் வருகின்றது.
ஹலாலென்றோ, ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆறுதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபி மொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாகக் கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்தேகத்திற்கு வழிகாட்டுகிறது.
வங்கிக் கணக்கு நிர்பந்தமா? என்று அடுத்துப் பார்ப்போம்:
வங்கியின் வட்டியை (வட்டி என்று பேங்க் குறிப்பிடுவதால் நாமும் புரிவதற்காக அவ்வாறே குறிப்பிடுவோம்) பெறலாமா, கூடாதா என்பது வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாமா? என்ப திலிருந்து துவங்கும் பிரச்சனையாகும். எனவே வங்கிக் கணக்கு நிர்ப்பந்தமா? என்பது நாம் முதலில் அலசவேண்டும்.
வங்கியில், நிர்ப்பந்தத்திற்காகவே கணக்கு வைத்துள்ளோம் என்று பரவலாக முஸ்லிம் சகோதரர்கள் (அடிப்படையை உணர்ந்தவர்களும்) சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அதில் நிர்ப்பந்தம் உள்ளதா என்பதை நாம் நிதானத் தோடும், தூர நோக்கோடும், ஆதார அடிப்படையிலும் அலசிப் பார்க்க வேண்டும்.
நிர்ப்பந்தம் என்றால் என்ன?
பொதுவாக நிர்ப்பந்தம் என்பது மனிதர்களுக்கு மனிதர் மாறுபடவே செய்யும். சிலர் கடினமான சூழ்நிலையைக் கூட இலேசாக எடுத்துக் கொண்டு சமாளித்து விடுவார்கள். இன்னும் சிலர் சிறிய அளவிலான பிரச்சனைகளையும் நிர்ப்பந்தம் என்று கூறித் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வார்கள். இது மனிதர்களின் மன உறுதியைப் பொறுத்து மாறுபடும். ஆனால் ஒரு முஸ்லிம் “நிர்ப்பந்தத்திற் குரிய அளவை’ அவனாகவே தீர்மானித்துக் கொள்ள முடியாது. நிர்ப்பந்தம் என்றால் என்ன என்பதற்கு இஸ்லாம் வழிகாட்ட வேண்டும்.
இஸ்லாம் எதை நிர்ப்பந்தம் என்கிறது?
1. இறைக் கட்டளையை மீறும் நோக்கமில் லாமலும்,வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப் படுவோர் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. (அல்குர்ஆன் 2:173, 3:28, 6:145, 16:106, 115)
2. பாவம் செய்யும் எண்ணமில்லாமல் பசியின் காரணமாக நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பான். (அல்குர்ஆன்: 5:3)
நிர்ப்பந்தம் என்ன என்பதை விளக்கும் வசனங்கள் இவை:
வரம்பு மீறக்கூடாது, இறைக் கட்டளையை மீறும் நோக்கமிருக்கக் கூடாது என்று இரண்டு கடின நிபந்தனைகளை இஸ்லாம் நிர்ப்பந்தத்திற்கு அளவுகோலாக்கியுள்ளது. வங்கி கணக்கு நிர்ப்பந்தம் என்று கூறுவோர் இந்த நிபந்தனைகளுக்கு ஆட்பட்டவர்கள் தான் என்பதை யாரும் எளிதாக விளங்க முடியும்.
பாவம் செய்யும் நோக்கம்-வரம்பு மீறுதல் விளக்கம் என்ன?
பாவம் செய்யும் நோக்கமில்லாமலும்-வரம்பு மீறாமலும் என்பது உணவுப் பற்றிய வசனங்களில் வந்தாலும் “அந்த நிபந்தனைப் பொதுவானதாகும். விலக்கப்பட்ட எது ஒன்றை நோக்கியும் பாவம் செய்யும் நோக்கம் இருக்கக் கூடாது-வரம்பு மீறவும் கூடாது. அன்றைக்கு விவசாய-உணவுத் தட்டுப் பாடு அதிகம் இருந்ததால் அது குறித்துப் பேசும் வசனங்களில் அந்த நிபந்தனைகள் முன் வைக்கப் பட்டதே தவிர உணவுக்காக மட்டும் அவை முன் வைக்கப்படவில்லை.
இந்த நிபந்தனைப் பொதுவானதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இன்னுமொரு வசனத்தைப் பார்ப்போம். “இறைவன் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்தியைத் தாண்டி நிர்ப்பந்திக்க மாட்டான்’. (அல்குர்ஆன் 2:286) இங்கு குறிப் பிடப்படும் நிர்ப்பந்தம் என்பது “உணவுக்குரியது மட்டும்தானா? அல்லது பொதுவானதா?’ நிச்சயம் பொதுவானது தான். இந்த பொதுவானதற்குரிய நிபந்தனை தான்-பாவம் செய்யும் நோக்கம் கூடாது – வரம்பு மீறக் கூடாது என்பதாகும்.
ஒரு பெண் அவளே சென்று விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கும்-பிறரால் கட்டாயப் படுத்தப்பட்டுக் கற்பிழப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னது அவளது விருப்பம், பிந்தயது பிறரால் நிர்ப்பந்திக்கப் படுவது. முந்தயதை செய்தால் குற்றம், பிந்தயதற்கு உட்படுத்தப்பட்டால் 2:173,6:145,2:285 ஆகிய வசனங்கள் அடிப்படையில் அவள் குற்றவாளியல்ல.
எனவே பாவம் செய்யும் நோக்கமில்லாமலும்-வரம்பு மீறாமலும் என்பது பொது நிபந்தனைதானே தவிர உணவு பற்றிய நிபந்தனை மட்டுமல்ல என்பது இப்போது விளங்கலாம். இன்றைய சிறு, பெருந்தொழில் புரிவோரும், ஏன் இஸ்லாமிய இதழ்கள் நடத்துவோரும் கூட வங்கிக் கணக்கின்றி செயல் பட முடியாது என்பதே எதார்த்த நிலை.
தேவைக்காக வங்கியைப் பயன்படுத்திக் கொள்வதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்தப் பயன்பாடு வங்கி சார்ந்த பாவ புண்ணியங்களில் பங்கெடுத்துக் கொள்வோம் என்ற துணிச்சலுடன் வெளிப்பட வேண்டுமே தவிர “இது எங்களுக்கே நிர்பந்தமான நிலை’ என்று பாசாங்கு பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வங்கி என்பது உலக முஸ்லிம் அறிஞர்களுக்கு மத்தியில் பெருத்தச் சர்ச்சையைக் கிளப்பியுள்ள சட்டப் பிரச்சனையாகும். அதை நாம் காலம் கடந்து நம் மொழியில் மிக, மிக, மிக குறுகிய அளவில் இப்போதுதான் பேசத் துவங்கியுள்ளோம். அதிலும் ஒரு சிலரே!
எந்தப் பிரச்சனை (வங்கி கணக்கு) வட்டிக்கு அடித்தளமாக இருக்கிறதோ அங்கிருந்து துவங்குவதுதான் அறிவுடமை என்பதால் நாம் அங்கிருந்து துவங்கியுள்ளோம். அல்லாஹ்வின் வசனங்களை விளங்கும் விஷயத்தில் அச்சமும், பேணுதலும், ஆழ்ந்த சிந்தனையும் இருக்க வேண்டும். “ஒரு கருத்தை நேரடியாக ஒரு வசனம் சொல்லும் போது அதை நாம் நேரடியாகத் தான் விளங்க வேண்டும்.
வங்கியும் வங்கியின் வட்டியும் “என்ன செய்யலாம்?’
பொறுமை இழந்து போய் அவசரமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் அதோடு சேர்ந்து படுவேகமாக இயங்க மனிதன் தன்னைப் பழக்கப்படுத் திக் கொண்டதால் நேற்றைய-அதற்கு முந்திய நாள் வாழ்க்கையயல்லாம் இவனுக்கு மறந்து போய் நாளைய-அதற்கு அடுத்த நாட்களுடைய வாழ்க் கையே மனதில் பூதாகரமாக விரிந்து இவனைப் பய முறுத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் அவசர உலகம் எதிலெல்லாம் இவனைப் பிணைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதி லெல்லாம் இவன் தன்னைப் பிணைத்துக் கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் அதுதான் வாழ்க்கை என்று தீர்மானிக்கவும் பிறரிடம் நியாயம் கற்பிக்க வும் தலைப்பட்டு விடுகிறான். இவன் தன்னைப் பிணைத்துக் கொண்ட நிர்ப்பந்த நிலைகளில் ஒன்றுதான் “வங்கி’ !
சிந்தனைக்கு எட்டிய தூரம் வரை மாற்று வழி கிடைக்கவில்லை. வேறு வழியும் இல்லை என்ற நிர்ப்பந்தமே பெருவாரியான முஸ்லிம் செல்வந்தர்களை வட்டி தன்னுள் கதகதப்பாக அணைத்துக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
வங்கியின் தேவைப் பல கோணங்களில் நியாயப்படுத்தப்பட்டாலும் அவற்றில் முக்கியமானது “பணத்திற்குப் பாதுகாப்பு’. பணத்திற்கான பாதுகாப்பு என்பது பணம் வைத்துள்ள செல்வந்தர் அவர் குடும்பம் ஆகியவற்றின் மானம், மரியாதை, வாழ்வியல் தேவை ஆகியவற்றின் உள்ளடக்கமாகும். தன் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் அது தன்னையும் தன் குடும்பத்தையும் பல வழிகளில் பாதிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வே “வட்டிக் கடையாக இருந்தாலும் பரவாயில்லை அதன் உதவியை நாடிவிடுவோம்’ என்று வங்கியை நோக்கி அவரைத் தள்ளி விடுகிறது. வங்கிக் கணக்கு திறந்தவுடன் அது கொடுக்கும் வட்டி விசயத்தில் தடுமாறுகிறார்.
இஸ்லாம் வட்டி வாங்கக் கூடாது என்று சொல்லுவதால் ” வங்கி வட்டியை வேண்டாம் என்று சொல்லி விடலாம்’ என்பது சிலரின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எந்த விதத்திலும் நியாயமானதாகத் தெரியவில்லை. இஸ்லாம் வட்டி வாங்க வேண்டாம் என்று மட்டும் சொல்லவில்லை; மாறாக வட்டியோடு உள்ள அனைத்துத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்ளச் செல்கிறது. அப்படி இருந்தும் “தனி மனித பாதுகாப்பு’க் கருதி வட்டியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்பவர்கள் “சமூக பாதுகாப்பை’க் கண்டுகொள்ளாமல் தன்னை “தக்வா தாரியாக’க் காட்டிக் கொள்வது பொருத்தமானதுதானா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதுவே வரம்பு மீறும் செயலாகும். “தனி சொத்து-செல்வம் பிறரால் அழிக்கப்பட்டு தன்னை நிற்கதியாக ஆக்கிவிடக் கூடாது’ என்பதில் ஒரு முஸ்லிம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ அதேபோன்று பிறரை அழிக்க தனது செல்வமோ-செயலோ எந்த வகையிலும் துணைப் போகக் கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முஸ்லிம்களைக் கருவறுப்பதற்கும்-முஸ்லிம் பெண்களை எழுதக் கூசும் விதத்தில் படு கேவலமாக மானப்பங்கப்படுத்திக் கொலை செய்வதற்கும்-வழிபாட்டுத் தலங்களையும் வாழ்வுரிமையையும் இல்லாமலாக்குவதற்கும் பன்னெடுங் காலமாக பன் முகத் திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீயச் சக்திகளுக்கு ஊக்கமளிப்பதற்கும்-பாதுகாப்பு அளிப்பதற்கும் அள்ளிக் கொட்டப்படும் மில்லியன் கணக்கானப் பணத்தில் “வங்கியின் வட்டிப் பணம்’ அளப்பரியப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் விளங்கித்தான் வைத்துள்ளோம்.
வங்கியை அணுகிப் பாதுகாப்பிற்காகப் பணத்தைப் போடும் முஸ்லிம்களின் பணம் ஹராமான வழியில் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் வட்டி வேண்டாம் என்று சொல்வதன் மூலம் அவர்களின் பணத்தின் மீது வந்து விழும் வட்டி பல வழிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி அவர்களின் சமூகத்தை அழிப்பதற்கே செலவிடப்படுகிறது. தன் செல்வத்தின் மீது அக்கறைச் செலுத்தும் முஸ்லிம்கள் தன் சமூகத்தின் மீது அக்கறைச் செலுத்தாமல் பின்வாங்குவது இஸ்லாமிய வாழ்க்கை முறையா?
“இந்த மாதமும்-இடமும் எவ்வளவு புனித மானதோ அதே போன்று ஒவ்வொரு முஸ்லிமின் பொருளும், மானமும், இரத்தமும் புனிதமான தாகும் என்று நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது எச்சரித்துச் சென்ற வார்த்தைகளை நாம் எப்பொழுதும் நினைவில் வைக்க வேண்டும். தனி மனிதச் சொத்தை ஹராமான வழியில் பாதுகாப்பது நிர்ப்பந்தம் என்றால் சமூகத்தின்மானத்தையும் சொத்தையும் பாதுகாப்பது அதை விட நிர்ப்பந்தம் இல்லையா? இதற்குப் பதில் என்ன?
நம் பணத்திற்கு வரும் வட்டியை வங்கியோடு விட்டு விடுவது பற்பலக் கெடுதிகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை வங்கியோடு விட்டு விடுவது நியாயமில்லை. தனது சுய நிர்ப்பந்தத்தைக் காரணம் காட்டி வங்கியில் கணக்கைத் துவங்குவோர் சமூகத் தின் மீது நிலவிக் கொண்டிருக்கும் நிர்ப்பந்தத்தையும்-பாதிப்பையும் கருத்தில் எடுக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். வட்டியோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ள நிலையில் வட்டி வேண்டாம் என்று பேசுவது சமுதாய அழிவிற்கு ஒரு வகையில் துணை போகும் செயல் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தோம். வங்கியோடு வட்டியை விடக்கூடாது என்றால் நம்மீது வட்டி ஹராமான நிலையில் அதை என்ன செய்வது என்றக் கேள்விக்கு இப்போது வருவோம்.
வட்டி குறித்து வரும் வசனங்களைச் சற்று ஆழ மாகச் சிந்தித்தால் இதற்கு விடை கிடைத்து விடும். 2:275வது வசனத்தில் “வட்டியை உண்பது’ பற்றியும், 3:130வது வசனத்தில் “பெருகும் வட்டியை உண்ணக் கூடாது’ என்பது பற்றியும், 30:39வது வசனத்தில் “செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக வட்டி வாங்கக் கூடாது’ என்பது பற்றியும், 2:278வது வசனத்தில் “எஞ்சியுள்ள வட்டியை வாங்கக் கூடாது’ என்பது பற்றியும் இறைவன் சுட்டிக் காட்டியுள்ளான்.
வங்கி வட்டி வேண்டாம்; அதைப் பிறருக்கும் கொடுக்கக் கூடாது என்று ஒரு குர்ஆன் வசனம் கருத்தை முன் வைப்பதாக சில சிந்தனையாளர்கள் விளங்குகிறார்கள். அந்த வாதம் நியாயமானதா? பார்ப்போம்.
2:267வது வசனம் நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்தவைகளில் நல்லவற்றையும், நாம் உங்களுக்கு வெளிப்படுத்திக் கொடுத்தவற்றில் நல்லவற்றையும் செலவு செய்யுங்கள். கெட்டவற்றைத் தேடி அதிலிருந்து செலவு செய்யாதீர்கள். அத்தகைய பொருள் உங்களுக்குக் கிடைத்தால் (வெறுப்புடன்) கண்ணை மூடிக் கொண்டுதான் அதை வாங்குவீர்கள். இது மிக ஆழமான அறிவுரை என்பதால் இந்த வசனத்தைப் பார்க்கும் எவருக்கும் “வங்கியின் வட்டியை’ செலவிடக் கூடாது என்ற சிந்தனையே தோன்றும். ஏனெனில் “கெட்டவற்றைச் செலவு செய்யாதீர்கள்’ என்ற அறிவுரை இந்த வசனத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.
வங்கியோடு தொடர்பு கொண்டு விட்டால் வட்டிக் கட்டாயம் நம் முதலோடு வந்து சேரும் என்பதையும், அதை நாம் பெறாவிட்டால் நம் அனுமதியுடன் அது மோசமான காரியங்களுக்குச் செலவிடப்படுகிறது என்பதையும் மிக அழுத்தமாக முன்னரே விளக்கியுள்ளோம்.
2:267வது வசனப்படி “நல்லவற்றைச் செலவிட வேண்டும் என்றால் கட்டாயம் நாம் வங்கிக் கணக்கைத் தவிர்த்துத்தான் ஆக வேண்டும்’. நாம் வங்கியில் தொடர்பு வைத்துக் கொள்வதால் நம் பொருளாதாரத்தில் ஒரு பகுதியில் தீயது வந்து கலக்கவே செய்கிறது. அதை நாம் வேண்டாம் என்றாலும் நம் அனுமதியுடன் பல தீயக் காரியங்களுக்கு அது செலவிடவே படுகிறது. அதாவது வங்கியில் கணக்கு வைப்பதின் வாயிலாக 2:267 வசனத்திற்கு மாற்றமாக தீயதைச் சம்பாதித்துத் தீயவற்றிற்குச் செலவிடத்தான் செய்கிறோம்.
இப்படி நாம் கூறும்போது வங்கிக் கணக்கை நியாயப்படுத்துவோர் “அது எங்களுக்கு நிர்ப்பந்தம்’ என்ற வாதத்தையே முன் வைப்பார்கள். உண்மையிலேயே அதை நிர்ப்பந்தமாக வைத்துக் கொண்டாலும் தனி மனித நிர்ப்பந்தத்தை விட சமூக நிர்ப்பந்தம் இன்னும் ஆழமான பிரச்சனைகளைக் கொண்டதாகும் என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தோம்.
“நிர்ப்பந்தம் என்ற நிலையில் நாம் இந்தப் பிரச்சனையை அணுகினால் 2:267வது வசனத்தை இங்கு பொருத்திப் பார்க்க முடியாது. ஏனெனில் “நிர்ப்பந் தம் வரும்போது ஹராமானவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. நிர்ப்பந்தம் இல்லை என்றால் வங்கியிலிருந்து விடு பட்டு விட்டு இந்த வசனத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த வசனத்தை நாம் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வோம். நம்மை நம்முடைய நண்பர் விருந்துக்கு அழைத்துச் சென்று “தண்ணீர் ஊற்றிய பழைய சோற்றை’ நமக்கு கொடுத்தால் நாம் முகம் சுழிப்போம். ஆனால் நாமோ சில நேரங்களில் பசியினால் பழையதைச் சாப்பிடும் நிலை ஏற்படும்.
“முகம் சுழித்தல் என்பதும்-கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளுதல் என்பதும்’ நாம் நல்ல நிலையில் இருக்கும்போது நமக்கு வரும் கெட்ட வற்றைக் குறிப்பதாகும். “நெருக்கடியில் இருக்கும் போது யாரும் தமக்கு வருவதைப் பரிசீலித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். பரிசீலிக்கத் தேவையில்லை. 2:267வது வசனத்தில் “கண்ணை மூடிக் கொண்டேயல்லாமல்’ என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து அது நல்ல நிலையை குறிக்கும் வசனம் என்பதை விளங்கலாம்.
“சோமாலியா உட்பட வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகள். உள் நாடுகளிலேயே வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் இவர்களில் எவரும் தமக்கு வருவதைக் கண்டு முகம் சுளிக்க மாட்டார்கள். நல்ல நிலையில் இருக்கும் நாம் “சிலதைக் கண்டு’ முகம் சுளிக்கலாம். அதை எல்லோருக்கும் பொருத்திக் காட்டக் கூடாது.
வங்கி வட்டியை வங்கிக்காரர்களிடம் கொடுப்பதா? வறுமையில் உழல்பவர்களிடம் கொடுப்பதா? என்பதுதான் பிரச்சனை. அது நல்லதா? கெட்டதா? என்பதல்ல பிரச்சனை. கெட்டது என்று தெரிந்து தான் அதில் இணைகிறோம். கெட்டதை என்ன செய்யலாம் என்பது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே நிர்ப்பந்தம் என்றெண்ணி வங்கியில் கணக்கு வைப்பவர்கள் தமது வங்கி இருப்பில் வந்து சேரும் வட்டியை எடுத்து தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தாதமல் பசி பட்டினியில் உழன்றுக் கொண்டிருக்கும், ஒதுங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல் ரோட்டோரங்களில், நடைப்பாதைகளில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கும் பார்ப்பதற்கே பரிதாபப் பிறவிகளாக வாழும் அந்த மனித சகோதர, சகோதரிகளுக்குக் கொடுத்து விடலாம். இதனால் நமக்கு நன்மை கிடைக்காவிட்டாலும் கூட அந்த மக்களின் வாழ்க்கை சில நாட்கள் (தொகையை பொருத்து சில மாதங்கள், வருடங்கள்) சந்தோஷமாகக் கழியும். (இறைவன் மிக்க அறிந்தவன்)
இந்தக் கட்டுரைப் பற்றிய உங்களின் ஆதர வான, எதிரான கருத்துக்கள் அனைத்தையும் எதிர்பார்க்கிறோம். எதிர்வாதங்கள், ஆதாரங்கள் அனைத்தையும் விமர்சனங்களாகச் சமர்ப்பியுங்கள்.  வட்டியின் மூலம் (அதை வாங்குபவர்கள்) தன்னை வளப்படுத்திக் கொள்வதே இங்கு முழு மையாக தடைச் செய்யப்பட்டுள்ளது என்பதை அந்த வசனங்களின் பொருளைச் சிந்தித்தாலே விளங்கலாம்.
வங்கி கொடுக்கும் வட்டியை ஒருவன் தன் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வதற் காக வாங்குகிறான் என்றால் அவன் இறைவனோடு போர் தொடுக்கும் அளவிற்கு பெரும் குற்றவாளி யாகி விடுவான். தன் தேவைக்காக இல்லாமல் பிறர் தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் ஏதாவது வழிகளைக் காட்டியுள்ளதா? என்று சட்டங்களை அலசும் போது “”ஒருவருக்கு ஹராமான பொருள் பிறருக்கு ஹலாலாகும் நிலை இருந்தால் அதைப் பெற்று அவருக்கு கொடுக்கலாம்’ என்ப தற்கு ஆதாரம் கிடைக்கின்றது.
ஆண்களுக்குப் பட்டுத்துணியை ஹராம் என்று அறிவித்த நபி(ஸல்) அவர்கள் ஒரு பட்டுத் துணியை உமர்(ரழி) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். “ஆண்களுக்குப் பட்டு ஹராம் என்றீர்கள்; இப்போது அதையே எனக்குக் கொடுக்கிறீர்களே…’ என்று உமர்(ரழி) கேட்க “அது பெண்களுக்கு ஹலால்தானே அவர்களுக்குக் கொடுங்கள்’ என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரீ).
ஒருவருக்கு ஒரு பொருள் கிடைக்கிறது. ஆனால் அது அவருக்கு ஹராமானப் பொருள்; அதை அவர் பாழ்படுத்தி விடாமல்-வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளாமல்-அது பிறருக்குப் பயன்படுமா என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.
வங்கியின் வட்டி(வட்டி என்றே வைத்துக் கொண்டாலும்) நமக்கு ஹராம் என்றாலும் “இது போன்றப் பணங்களில் எதுவும் ஹராமில்லை’ என்ற நிலையில் வறுமைக் கோட்டிற்கு மிக மிகக் கீழ் நம்மைச் சுற்றி லட்சக்கணக்கான ஏழைகள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பணத்தைக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்க ளின் வயிற்றுப் பசியும் போக்கப்படும்-சதித்திட்டங்களுக்கு இந்தப் பணம் போவதும் தடுக்கப்படும். வட்டி தின்றக் குற்றத்திற்கும் நாம் ஆளாக மாட் டோம். நாம் வட்டிவேண்டாம் என்றாலும் வட்டி வரத்தான் செய்யும் என்பதை இனி பார்ப்போம்.
வட்டி கட்டாயமே…!
பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது இன்ன பிற தேவைகளுக்காகவோ வங்கியை நாடுபவர்கள் தங்களுக்கு வட்டி வேண் டாம் என்ற நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். வங்கியின் சட்ட விதியைப் பொருத்தே இதற்கு நாம் பதில் தேடவேண்டும். வங்கியில் கணக்கு வைப்பவர்கள் “வட்டி வேண் டாம்’ என்றால் இத்தகையோர் குறித்து வங்கியின் விதி என்ன கூறுகிறது என்பதைப் பார்க்கும்போது “ஒன்றுமே கூறவில்லை’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.
அதாவது வங்கிச் சேமிப்பாளர்கள் விசயத்தில் அவர்களின் பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டி விகிதத்தில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். வட்டியே வேண்டாம் என்று சொல்லுபவர்களின் தொகைக்கு வட்டி ஒதுக்கப்படாது என்று வங்கி விதி ஏதாவது இருக்கிறதா? என்றால் அப்படியெல்லாம் எந்த வங்கியிலும் சட்டம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சட்டத் திருத்தம் என்று ஒன்று வங்கி விதியில் வந்தாலும் அப்போதும் இந்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டு விடும். ஏனெனில் “வட்டி என்பதே வங்கியின் உயிர் மூச்சாகும்’ என்பதால் அதற்கு எதிராக எந்த தத்துவத்தையும் அது ஏறிட்டுக் கூடப் பார்க்காது. வட்டி வேண்டாம் என்று எழுதிக் கொடுப்பவர்களின் பணம் அப்படியே பொட்டலமாகக் கட்டப்பட்டு வங்கியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டுக் கேட்கும் போது எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வங்கி களிடம் எதிர்பார்ப்பதை விட மடமை பிரிதொன்று இருக்க முடியாது.
வங்கிச் சேமிப்பு மீது “வட்டி கொடுக்கப் படாது’ என்ற விதி விலக்கான சட்டம் எதுவும் இல்லை எனும்போது ஒரு முஸ்லிம் வட்டி வேண்டாம் என்கிறார்; இப்போது என்ன நடக்கும்?
உதாரணமாக வைப்புத்தொகை 5 லட்சம் உள்ள ஒரு முஸ்லிம் தனக்கு வட்டி வேண்டாம் என்ற நிலையில் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இவர் வட்டி வேண்டாம் என்பதால் “இவரது தொகை மீது வட்டி வந்து விழாமல் இருக்காது’. ஏனெனில் அப்படியெல்லாம் சட்டம் ஒன்றும் இல்லை. வட்டித் தொழிலில் முடக்கப்பட்ட இவரது 5 லட்சத்திற்கான வட்டித் தொகை அந்த பணத்திற்காக ஒதுக்கப்படவே செய்யும். அதாவது அவரது அசல் தொகையுடன் சேர்ந்து வட்டியும் அவரது பணமாகவே கருதப்படும். இந்நிலையில் “எனக்கு வட்டி வேண்டாம் என்று அவர் அறிவித்தால் என் வட்டிப் பணத்தை என் விருப்பத்தோடு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்ற கருத்தே அங்கு உருவாகும். இது வரம்பு மீறும் செயலாகும்.
பணத்தின் மீது வட்டி சேராமலிருந்தால் தான் வட்டி வேண்டாம் என்று சொல்வதின் அர்த்தம் சரியாக இருக்கும். வட்டி வந்து சேரும் நிலையில் எனக்கு வட்டி வேண்டாம் என்றால் “என் வட்டியை நான் உனக்குக் கொடுக்கிறேன் நீ எடுத்துக் கொள்’ என்று வட்டி வாங்கி அதை தான் வங்கிக்குக் கொடுக்கிறோம். இது வரம்பு மீறும் செயலாகும்.
வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளும் போது நம் பணத்திற்கான வட்டியை நாம் வாங்குகிறோம் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ள வழியில்லை. ஏனெனில் நம் பணத்திற்கு வட்டி வந்து சேரத்தான் செய்கிறது. இப்போது அந்த வட்டியை நாம் யாருக்குக் கொடுக்கிறோம்? என்பதில்தான் பிரச்சனை.
வங்கியோடு விடும்போது அது நம் சமூகத்திற்கு எதிராகப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் வங்கி அதிகாரிகளும் ஊழியர்களும் கூட அதைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் வாய்ப்புக் கூட இருக்கலாம். அல்லது முறையாக வங்கித் தணிக்கை யாளர்கள் தணிக்கை செய்யும் போது மேலதிகமாக கிடைக்கும் இந்த வட்டித் தொகையை அரசு வங்கிகளாக இருந்தால் அரசு கருவூலங்களிலோ, தனியார் வங்கியாக இருந்தால் அவர்களின் லாபத் தொகையிலோ சேர்ப்பிக்கப்படும் நிலைதான் உருவாகும். நமக்காக நமது பணத்திற்கு ஒதுக்கப்படும் வட்டியை வங்கியிலிருந்து எடுத்தால், ஹராம் ஹலாலாகும் நிலையிலுள்ள ஏழை மக்கள் ஓரளவு பயன் பெறுவார்கள். அதனால் தான் வட்டியை கண்டு அஞ்சும் உள்ளங்கள் அதை தம் தேவைக்குப் பயன்படுத்தாமல் அதன் பால் தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறோம்.

http://annajaath.com/?p=6261

=============


வட்டி குறித்து வரும் வசனங்களை சற்று ஆழமாக சிந்தித்தால் இதற்கு விடைக் கிடைத்து விடும்.

2:275 வது வசனத்தில் ‘வட்டியை உண்பது’ பற்றியும்,

3:130 வது வசனத்தில் ‘ பெருகும் வட்டியை உண்ணக் கூடாது’ என்பது பற்றியும்,

30:39 வது வசனத்தில் ‘செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக வட்டி வாங்கக் கூடாது’ என்பது பற்றியும்,

2:278 வது வசனத்தில் ‘ எஞ்சியுள்ள வட்டியை வாங்கக் கூடாது’ என்பது பற்றியும் இறைவன் சுட்டிக் காட்டியுள்ளான்
வங்கி வட்டி வேண்டாம் அதை பிறருக்கும் கொடுக்கக் கூடாது என்று ஒரு குர்ஆன் வசனம் கருத்தை முன் வைப்பதாக சில சிந்தனையாளர்கள் விளங்குகிறார்கள். அந்த வாதம் நியாயமானதா.. பார்ப்போம்.
2:267வது வசனம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்தவைகளில் நல்லவற்றையும்நாம் உங்களுக்கு வெளிபடுத்திக் கொடுத்தவற்றில் நல்லவற்றையும் செலவு செய்யுங்கள். கெட்டவற்றைத் தேடி அதிலிருந்து செலவு செய்யாதீர்கள். அத்தகைய பொருள் உங்களுக்கு கிடைத்தால் (வெறுப்புடன்) கண்ணை மூடிக்கொண்டுதான் அதை வாங்குவீர்கள். 
இது மிக ஆழமான அறிவுரை என்பதால் இந்த வசனத்தைப் பார்க்கும் எவருக்கும் ‘வங்கியின் வட்டியை’ செலவிடக் கூடாது என்ற சிந்தனையே தோன்றும்.ஏனெனில் ‘கெட்டவற்றை செலவு செய்யாதீர்கள்’ என்ற அறிவுரை இந்த வசனத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.
வங்கியோடு தொடர்பு கொண்டுவிட்டால் வட்டி கட்டாயம் நம் முதலோடு வந்து சேரும் என்பதையும், அதை நாம் பெறாவிட்டால் நம் அனுமதியுடன் அது மோசமான காரியங்களுக்கு செலவிடப் படுகிறது என்பதையும் மிக அழுத்தமாக முன்னரே விளக்கியுள்ளோம்.
2:267வது வசனப்படி ‘நல்லவற்றை செலவிட வேண்டும் என்றால் கட்டாயம் நாம் வங்கி கணக்கை தவிர்த்துத்தான் ஆக வேண்டும்’ நாம் வங்கியில் தொடர்பு வைத்துக் கொள்வதால் நம் பொருளாதாரத்தில் ஒரு பகுதியில் தீயது வந்து கலக்கவே செய்கிறது. அதை நாம் வேண்டாம் என்றாலும் நம் அனுமதியுடன் பல தீயக் காரியங்களுக்கு அது செலவிடவே படுகிறது. அதாவது வங்கியில் கணக்கு வைப்பதின் வாயிலாக 2:267 வசனத்திற்கு மாற்றமாக தீயதை சம்பாதித்து தீயவற்றிற்கு செலவிடத்தான் செய்கிறோம்.


ட்டி ஹராம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
 
வட்டி என்றால் என்ன ?

வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு
 

யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)
 

இஸ்லாத்தின் வட்டி 


வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.
 

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)
 

வட்டி பெரும் பாவம்
 

பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.
 

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி) 

புஹாரி 6857

வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள். 


அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)
 

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன்
 
30:39)
வட்டியும்,மறுமையும்.
 

மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
 

வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085


வட்டி சாபக்கேடு.
 

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
 
நூல்: முஸ்லிம் (3258)

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். 


அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)
 

புஹாரி 5347


அல்லாஹ் கூறுகிறான்:
 
 
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)
 

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).
 

வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
 

வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
 

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
 

வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
 
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
 

வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
 

வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
 

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
 

ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)
 

இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.
 

இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
 

நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

எனவே அல்லாஹ் நம்மைப்பாதுகாப்பானாக.!
 
இக்கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றுவானாக.!
ஹலாலாக உழைத்து ஹலாலை சாப்பிடக்கூடிய மக்களாக நம்மை மாற்றுவானாக.!
உயர்ந்த சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதற்ரு அருள் புரிவானாக.!
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=148:islamic-bankng-trichy&catid=81:tamilnadu&Itemid=198

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...