Thursday, July 10, 2014

அல்லாவின் திருப்பெயர்கள்

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.
ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்) 7:180

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
ஸூரத்துர் ரஃது (இடி) 13:28

அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 5198,5199

அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று போக தொண்ணூற்றொன்பது திருப்பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஸஹீஹுல் புகாரி 2736,6410,7392




தூய்மையாளன்
உண்மையான அரசன்
நிகரற்ற அன்புடையோன்
அளவற்றஅருளாளன்
மிகைத்தவன்
இரட்சிப்பவன்
அபயமளிப்பவன்
சாந்தி அளிப்பவன்
ஒழுங்கு செய்பவன்
படைப்பவன்
பெருமைக்குரியவன்
அடக்கியாள்பவன்
கொடைமிக்கவன்
அடக்கி ஆள்பவன்
மிக மன்னிப்பவன்
உருவமைப்பவன்
கைப்பற்றுபவன்
நன்கறிந்தவன்
வெற்றியளிப்பவன்
உணவளிப்பவன்
கண்ணியப்படுத்துபவன்
உயர்வளிப்பவன்
தாழ்த்தக்கூடியவன்
விரிவாக அளிப்பவன்
அதிகாரம் புரிபவன்
பார்ப்பவன்
செவியுறுபவன்
இழிவுபடுத்துபவன்
சாந்தமானவன்
உள்ளூர அறிபவன்
நுட்பமானவன்
நீதியாளன்
மிக உயர்ந்தவன்
நன்றி அறிபவன்
மன்னிப்பவன்
மகத்துவமிக்கவன்
விசாரணை செய்பவன்
கவனிப்பவன்
பாதுகாப்பவன்
மிகப்பெரியவன்
அங்கீகரிப்பவன்
காவல் புரிபவன்
சங்கைமிக்கவன்
மகத்துவமிக்கவன்
பெருந்தன்மையானவன்
நேசிப்பவன்
ஞானமுள்ளவன்
விசாலமானவன்
பொறுப்புள்ளவன்
உண்மையாளன்
சான்று பகர்பவன்
மறுமையில் எழுப்புபவன்
புகழுடையவன்
உதவி புரிபவன்
ஆற்றலுடையவன்
வலிமை மிக்கவன்
உயிரளிப்பவன்
மீளவைப்பவன்
உற்பத்தி செய்பவன்
கணக்கிடுபவன்
உள்ளமையுள்ளவன்
என்றும்நிலையானவன்
என்றும்உயிரோடிருப்பவன்
மரிக்கச் செய்பவன்
தேவையற்றவன்
அவன் ஒருவனே
தனித்தவன்
பெருந்தகை மிக்கவன்
பிற்படுத்துபவன்
முற்படுத்துபவன்
திறமை பெற்றவன்
ஆற்றலுள்ளவன்
அந்தரங்கமானவன்
பகிரங்கமானவன்
அந்தமுமானவன்
ஆதியானவன்
மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன
நன்மை புரிபவன்
மிக உயர்வானவன்
அதிகாரமுள்ளவன்
அரசர்களுக்கு அரசன்
இரக்கமுடையவன்
மன்னிப்பளிப்பவன்
பழி வாங்குபவன்
சீமான்-தேவையற்றவன்
ஒன்று சேர்ப்பவன்
நீதமாக நடப்பவன்
கண்ணியமுடையவன்
சிறப்புடையவன்

பலன் அளிப்பவன்
தீங்களிப்பவன்
தடை செய்பவன்
சீமானாக்குபவன்
நிரந்தரமானவன்
புதுமையாக படைப்பவன்
நேர்வழி செலுத்துபவன்
ஒளி மிக்கவன்
மிகப்பொறுமையாளன்
வழிகாட்டுபவன்
உரிமையுடைவன்

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...