முஃமின்களே!
நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை
உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு
செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம்
முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ
இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத்
தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத்
தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக்
(கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக்
கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை
– ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும்
பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். ஸூரத்துல் மாயிதா (உணவு மரவை) 5:6
‘எல்லாம்
வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் ஒலூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன்
ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அபூதாவுத்
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன்
அவசியம்
அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து,
அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி
உங்களுக்கு இருக்கிறது.
ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்) 33:21
எனவே
நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே
நாமும் செய்ய வேண்டும்.
நிய்யத் எனும் எண்ணம்
எல்லா
வணக்கங்களுக்கும் நிய்யத் எனும் எண்ணம் அவசியம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக
அமைந்துள்ளது. அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி),
நூல்கள்: புகாரீ 1, முஸ்லிம் 3530
நிய்யத்
என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். உளூ, தொழுகை, நோன்பு போன்ற
கடமைகளை நிறைவேற்றும் போது சில அரபிச் சொற்களைக் கூறுவது தான் நிய்யத் என்று கருதுகின்றனர்.
நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே
அதன் பொருளாகும்.
மேலும்
உளூச் செய்யும் போதோ, தொழும் போதோ, நோன்பு நோற்கும் போதோ நபி (ஸல்) அவர்கள் எதனையும்
வாயால் மொழிந்து விட்டுச் செய்ததில்லை. ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே வாயால்
மொழிந்துள்ளனர். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.
நான்
இப்போது உளூச் செய்யப் போகின்றேன்’ என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத்
ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது
அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.
பல் துலக்குதல்
உளூச்
செய்யத் துவங்கும் முன் பற்களைத் துலக்கிக் கொள்வது நபிவழியாகும். பல் துலக்குதல் உளூவின்
ஓர் அங்கம் அல்ல! உளூச் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய தனியான வணக்கமாகும். நபி (ஸல்)
அவர்கள் பல் துலக்கினார்கள். உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 1233
பல்
துலக்குதல் உளூவுக்குள் அடங்கி விடும் என்றால் ’உளூச் செய்தார்கள்’ என்று மட்டும் தான்
கூறப்பட்டிருக்கும். உளூச் செய்தார்கள் என்பதைக் கூறுவதற்கு முன் ’பல் துலக்கினார்கள்’
என்று கூறப்படுவதால் இது உளூவில் சேராத தனியான ஒரு வணக்கம் என்பது தெரிகின்றது. மேலும்
பல் துலக்குதல் நபி (ஸல்) அவர்களால் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்
துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்‘ என்று நபி (ஸல்)அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரீ 888
பல்
துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்‘ எனவும்
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்கள்: நஸயீ 5, அஹ்மத் 23072
‘என்
சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல்துலக்குவதைக்
கட்டாயமாக்கியிருப்பேன்‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத் 9548
உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும்
துஆவை ஓதுவது நபிவழியாகும்
ஒவ்வொரு
உறுப்பைக் கழுவும் போதும் தனித்தனி துஆக்கள் இல்லை. உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது
முதல் பிஸ்மில்லாஹ்’ (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறிக் கொள்ள வேண்டும்.
நபித்தோழர்கள்
உளூச் செய்வதற்கான தண்ணீரைத் தேடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவரிடமேனும்
தண்ணீர் இருக்கின்றதா?’ என்று கேட்டார்கள். (தண்ணீர் கொண்டுவரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில்
தமது கையை வைத்து, ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச்செய்யுங்கள்‘ என்று கூறினார்கள். அவர்களின்
விரல்களுக்கு இடையிருந்து தண்ணீர்வெளியேறியதை நான் பார்த்தேன். கடைசி நபர் வரை அதில்
உளூச் செய்தார்கள்.
இவ்வாறு
அனஸ் (ரலி) கூறினார்கள். ’மொத்தம் எத்தனை பேர் இருந்தீர்கள்?’ என்று அனஸ் (ரலி)யிடம்
கேட்டேன். அதற்கவர்கள், ‘சுமார் எழுபது நபர்கள்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: கதாதா,
நூல்: நஸயீ 77
உளூச் செய்யும் போது முதல் செய்ய வேண்டிய
செயல் இரு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவதாகும்
‘நீ
உளூச் செய்யும் போது இரு முன் கைகளையும் கழுவி தூய்மையாக்கினால் உனது சிறுபாவங்கள்
விரல் நுனியிருந்து வெளியேறுகின்றன‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி),
நூல்: நஸயீ 147
வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்
இரு
கைகளையும் மணிக்கட்டு வரை கழுவிய பின் வாயையும், மூக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள் செயல்விளக்கம்
அளித்த போது, ‘தமது இரு கைகளையும் மூன்று தடவை கழுவி விட்டு, (தண்ணீர்எடுத்து) வாய்
கொப்புளித்து, மூக்கையும் சுத்தம் செய்தார்கள்‘ என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
வாய்
கொப்புளிப்பதற்கும், மூக்கைச் சுத்தம் செய்வதற்கும் தனித்தனியாக இரண்டு தடவை தண்ணீர்
எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அதில் ஒரு பகுதியை வாயிலும்,
மற்றொரு பகுதியை மூக்கிலும் செலுத்திச் சுத்தம் செய்யலாம்.
இப்னு
அப்பாஸ் (ரலி) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன்
மூலமே வாய்கொப்புளித்து மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள்… (பின்னர்) ’இப்படித்தான்
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய நான் பார்த்தேன்‘ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி)கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூல்: புகாரீ 140
ஒரு
கைத் தண்ணீர் எடுக்கும் போது வலது கையால் எடுத்து இடது கையால் சுத்தம் செய்யவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் செய்தார்கள் என்பதை உஸ்மான் (ரலி) அவர்கள்விளக்கும்
போது, ‘தமது வலது கையைப் பாத்திரத்தில் விட்டு வாய் கொப்புளித்து, மூக்கையும்சீந்தினார்கள்‘
என்று கூறப்பட்டுள்ளது.
நூல்: புகாரீ 160, 164
அலீ
(ரலி) அவர்கள் உளூச் செய்வதற்குரிய தண்ணீரை எடுத்து வரச்செய்து, வாய்கொப்பளித்து, மூக்கிற்குத்
தண்ணீர் செலுத்தி, இடது கையால் சுத்தம் செய்தார்கள். பின்னர் ’இது தான் நபி (ஸல்) அவர்கள்
உளூச் செய்த முறையாகும்‘என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்து கைர்,
நூல்கள்: நஸயீ 90, அஹ்மத் 1078, தாரமீ
696
இதன்
பின்னர் முகத்தைக் கழுவ வேண்டும்.
இரு
கைகளால் கழுவுதல்.
நபி
(ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள் விளக்கும் போது, ஒரு
கைத் தண்ணீரை அள்ளி அதனை மற்றொரு கையால் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக்
கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் யஸார்,
நூல்: புகாரீ 140
ஒரு
கையால் கழுவுதல்.
நபி
(ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும்போது,
தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்: புகாரீ 186
தாடி
வைத்திருப்போர் முகத்தைக் கழுவும் போது தமது விரல்களால் தாடியைக் கோத வேண்டும். ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
நபி
(ஸல்) அவர்கள் உளூச் செய்யும் போது தண்ணீரைக் கொண்டு தமதுதாடியைக் கோதிக் கழுவுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: அஹ்மத் 24779
இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல்
முகத்தைக்
கழுவிய பின்னர் இரு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும். நபி (ஸல்) அவர்கள் உளூச்
செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும்போது, முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும்
மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: புகாரீ 160
முகம், கை, கால்களைச் சிறப்பாகக் கழுவுதல்
முகத்தைக்
கழுவும் போது முகத்தைக் கடந்து விரிவாகக் கழுவுவதும், கைகளைக் கழுவும் போது முழங்கை
வரை நிறுத்திக் கொள்ளாமல் அதையும் தாண்டிக் கழுவுவதும் விரும்பத்தக்கதாகும். இது கட்டாயம்
இல்லை.
‘உளூச்
செய்வதன் காரணமாக எனது சமுதாயத்தினர் முகம், கை, கால்கள் வெண்மையானவர்கள்‘ என்று அழைக்கப்படுவார்கள்.
யார் தமது வெண்மையை அதிகப்படுத்த விரும்புகின்றாரோ அவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும்‘
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரீ 136, முஸ்லிம் 362
எனவே
முகம், கை கால்களைக் கழுவும் போது விரிவாகக் கழுவுவது சிறந்ததாகும்.
தலைக்கு மஸஹ் செய்தல்
இரு
கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். நபி
(ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும்போது,
தம் இரண்டு கைகளையும் தலையின் முன்பகுதியில் வைத்து பிடரி வரை கொண்டுசென்று பிறகு அப்படியே
எந்த இடத்திலிருந்து தடவ ஆரம்பித்தார்களோ அந்த இடத்திற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா,
நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346
இது
தான் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த மஸஹ் செய்யும் முறையாகும். பெண்களும் ஆண்களைப்
போலவே பிடரி வரை மஸஹ் செய்ய வேண்டும்.
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.
தலையில் ஒரேயொரு முடியில் சிறிதளவை மட்டும் ஒரு விரலால் தொட்டால் போதும் என்று ஷாஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், தலையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு மஸஹ் செய்தால் போதும் என்று ஹனஃபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் கூறுகின்றனர். இதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை.
எத்தனை தடவை மஸஹ் செய்ய வேண்டும்?
தலைக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ மஸஹ் செய்யலாம். நபி (ஸல்)
அவர்கள் உளூச் செய்த முறையைஅப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் விளக்கும் போது, கையை
(பாத்திரத்தில்) நுழைத்து இருகைகளையும் தலையில் வைத்து முன் பக்கத்திலிருந்து பின்
பக்கம் கொண்டு வந்து பின்னர்பின்பக்கமிருந்து முன் பக்கம் கொண்டு வந்தார்கள். இவ்வாறு
ஒரு தடவை செய்தார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா,
நூல்: புகாரீ 186, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவுது, இப்னுமாஜா, அஹ்மது
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி),
நூல்: நஸயீ 98
தலைக்கு மஸஹ் செய்யும்
போது இரண்டு காதுகளுக்கும் மஸஹ் செய்வது நபிவழியாகும்
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த போது தலைக்கும், தமது ஆட்காட்டி விரல்களைக்
காதுகளின் உட்பகுதியிலும்,கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும்
மஸஹ்செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி),
தலைக்கு மஸஹ் செய்வது போல் சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு
ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் கிடையாது.
இரண்டு கால்களையும் கழுவுதல்
இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும்,
பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்
விளக்கும்போது, ஒரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தமது வலது காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிஅதனைக்
கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடது காலில் ஊற்றிக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: அதா பின்
யஸார்,
கால்களைக் கரண்டை வரை கவனமாகக்கழுவுவது அவசியமாகும்
நபி (ஸல்) அவர்கள்உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி)அவர்கள் விளக்கும் போது, இருகால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: புகாரீ 160
ஒரு
மனிதரின் காலில் நகம் அளவுக்கு தண்ணீர் படாததைக்கண்ட நபியவர்கள் திரும்பிச் சென்று
உம் உளுவை அழகாகச்செய் என்றார்கள்.
அறிவிப்பவர்:அனஸ் (ரலி)
நூல்: நஸயீ, அபூதாவூது
குதிகால்களை
நன்றாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா,
நூல்: புகாரி
உளூச் செய்யும் தொட்டியிலிருந்து மக்கள் உளூச் செய்து கொண்டிருந்த
போது அவ்வழியே சென்ற அபூஹுரைரா (ரலி) அவர்கள் (எங்களைப் பார்த்து) ’உளூவை முழுமையாகச்
செய்யுங்கள்.குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்குக் கேடு தான் என்று நிச்சயமாக
முஹம்மத்(ஸல்)அவர்கள் கூறினார்கள்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மத்
பின் ஸியாத்,
தலைக்கு மஸஹ் செய்வதைத் தவிர மற்ற காரியங்கள் அனைத்தையும் ஒவ்வொரு
தடவையோ, அல்லது இரண்டிரண்டு தடவையோ, அல்லது மும்மூன்று தடவையோ செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தடவை கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்
(ரலி),
நூல்: புகாரீ 157
நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு தடவைகள் கழுவி உளூச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
பின் ஸைத் (ரலி),
நூல்: புகாரீ 158
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை உஸ்மான் (ரலி) அவர்கள் விளக்கும்
போது, தமதுகைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது
வலதுகையை விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர்.
பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர்
தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: புகாரீ 160
எனவே ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவுவதும், இரண்டு தடவை கழுவுவதும்,
மூன்று தடவை கழுவுவதும் நபி வழி தான். நம் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப எதை
வேண்டுமானாலும் நடைமுறைப் படுத்தலாம்.
ஒரு உளூவிலேயே கூட நாம் விரும்பியவாறு செய்யலாம். முகத்தை இரு தடவை
கழுவி விட்டு, கைகளை மூன்று தடவையும், கால்களை ஒரு தடவையும் கழுவலாம்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த முறையை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
அவர்கள் விளக்கும் போது, தமது இரு முன் கைகளிலும் தண்ணீரை ஊற்றி இரு முறை கழுவினார்கள்.
பின்னர் மூன்று முறை வாய்கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்திச் சீந்தினார்கள்.
பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் மூட்டு
வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா
நூல்கள்: புகாரீ 185,
முஸ்லிம் 346
உளூவின் போது ஒவ்வோர் உறுப்பையும் அதிகப்பட்சமாக மூன்று முறை கழுவலாம்
என்பதைக் கண்டோம். மூன்று தடவைக்கு மேல் கழுவுவதற்குத் தடை உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து உளூச் செய்யும் முறை பற்றிக்
கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று தடவைகள் கழுவி உளூச் செய்து காட்டி
விட்டு, ‘இது தான் உளூச் செய்யும் முறையாகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர்
தீங்கிழைத்து விட்டார்; வரம்பு மீறி விட்டார்; அநியாயம் செய்து விட்டார்’ எனக் கூறினார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: அம்ர் பின்
ஷுஐப் (ரலி)
நூல்கள்: நஸயீ 140, அஹ்மத்
6397
வரிசையாகச் செய்தல்
மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான்
நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர். இதை
மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களிலிருந்து அறியலாம்.
உளூச் செய்யும் போது கடைசியாக இரு கால்களையும் கரண்டை வரை கழுவ வேண்டும்
என்பதை உரிய ஆதாரங்களுடன் முன்னர் கண்டோம்.
காலுறை அணிந்திருப்பவர்கள் கால்களைக் கழுவாமல் காலுறையின் மேற்பகுதியில்
ஈரக் கையால் தடவிக் கொள்ளலாம் என்பது இந்தச் சட்டத்தில் உள்ள விதி விலக்காகும்.
நான் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி (ஸல்)
அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தண்ணீர்
ஊற்றினேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது முகத்தையும், இரு கைகளையும்
கழுவினார்கள். தலைக்கு மஸஹ் செய்தார்கள். இரு காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா
(ரலி),
நூல்கள்: புகாரீ 182,
முஸ்லிம் 404
பெண்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்வது கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.
இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்த வணக்கமும் இரு பாலருக்கும் உரியது
தான். பெண்களுக்கு இல்லை என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் சொல்யிருக்க வேண்டும். அவ்வாறு
ஹதீஸ்களில் கூறப்படாததே இச்சலுகை பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
மேலும் காலுறைகள் மீது மஸஹ் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பது அதைக்
கழற்றுவதால் ஏற்படும் சிரமத்துக்காகவே! அச்சிரமம் இரு பாலருக்கும் பொதுவானது என்பதால்
இச்சலுகையும் பொதுவானது தான்.
காலுறைகள் மீது மஸஹ் செய்யவதற்குரிய
நிபந்தனைகள்
ஆண்களும் பெண்களும் கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம்
என்ற இச்சலுகைக்கு சில நிபந்தனைகள் உள்ளன. காலுறைகளை அணிவதற்கு முன் கால்களைக் கழுவியிருக்க
வேண்டும் என்பது முதல் நிபந்தனையாகும்.
நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றிய போது அவர்களின்
காலுறைகளை நான் கழற்ற முயன்றேன். அப்போது அவர்கள், ‘அவற்றை விட்டு விடு! ஏனெனில் கால்கள்
தூய்மையாக இருந்த நிலையில் தான் அவற்றை நான் அணிந்திருக்கிறேன்’ என்று கூறி அவற்றின்
மீது மஸஹ் செய்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி),
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி),
நூல்கள்: புகாரீ 206,
முஸ்லிம் 408
காலுறைகள் அணிவதற்கு முன் கால்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை
இந்த ஹதீஸிருந்து அறியலாம். கால்களில் வெளிப்படையாகத் தெரியும் அசுத்தங்கள் ஏதும் ஒட்டியிருந்து
அதன் மேல் காலுறை அணிந்து கொண்டால் மஸஹ் செய்ய முடியாது. காலுறையை அணியும் போது உளூவுடன்
இருக்க வேண்டும்.
தூய்மையாக இருக்க வேண்டும் என்பது இவ்விரண்டையும் குறிக்கும்.
ஒருவர் உளூச் செய்து கால்களைக் கழுவுகின்றார். உடனே காலுறைகளை அணிந்து
கொள்கின்றார் என்றால் அதன் பின்னர் அவர் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள்
மீது மஸஹ் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் அவர் மலஜலம் கழித்தாலும் கால்களைக் கழுவாமல்
காலுறைகள் மீது மஸஹ் செய்து கொள்ளலாம்.
ஒருவர் லுஹர் நேரத்தில் உளூச் செய்கின்றார். அப்போது கால்களையும்
கழுவுகின்றார். இதன் பின்னர் அஸர் வரை அவரிடமிருந்து உளூவை நீக்கும் காரியங்கள் ஏதும்
நிகழவில்லை. இந்த நிலையில் அஸர் நேரத்தில் காலுறைகளை அணிகின்றார் என்றால் இவரும் இதன்
பின்னர் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். காலுறை அணிவதற்குச் சற்று முன்னர் தான் கால்களைக்
கழுவ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. காலுறை அணியக் கூடிய நேரத்தில் அவருக்கு உளூ இருக்க
வேண்டும் என்பது தான் கட்டாயம்.
உளூவுடனும், கால் அசுத்தம் இல்லாத நிலையிலும் காலுறை அணிந்தவர்,
காலமெல்லாம் காலுறைகள் மீது மஸஹ் செய்ய முடியாது.
தினமும் ஒரு தடவையாவது காலுறைகளைக் கழற்றி கால்களைக் கழுவிக் கொள்ள
வேண்டும். இன்று காலை 10மணிக்கு உளூச் செய்த நிலையில் ஒருவர் காலுறை அணிந்தால் நாளை
காலை 10 மணி வரை அவர் எத்தனை தடவை உளூச் செய்தாலும் கால்களைக் கழுவத் தேவையில்லை. காலுறைகள்
மீது மஸஹ் செய்வதே போதும். 24மணி நேரம் கடந்து விட்டால் கால்களைக் கழுவி விட்டு உளூவுடன்
காலுறையை அணிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளாக இருப்பவர்களுக்கு இதில் கூடுதல் சலுகை உள்ளது. அவர்கள்
உளூவுடன் காலுறை அணிந்தால் காலுறை அணிந்த நேரத்தில் இருந்து மூன்று நாட்கள் (72 மணி
நேரம்) காலுறையைக் கழற்றாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம். பயணத்தில் இருப்பவர்கள்
மூன்று நாட்களுக்குப் பின் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவிவிட்டு உளூவுடன் காலுறையை
அணிய வேண்டும்.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேள்வி
கேட்கச் சென்றேன். அதற்கவர்கள், ‘அலீ பின் அபீதாபிடம் சென்று கேள். அவர் தான் நபி
(ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள். நாங்கள் அலீ (ரலி)
அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். ’பயணிகளுக்கு மூன்று பகல் மூன்று இரவு எனவும், உள்ளூரில்
இருப்பவர்களுக்கு ஒரு பகல் ஓர் இரவு எனவும் நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்’ என்று
அலீ (ரலி) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஷுரைஹ்,
அறிவிப்பவர்: ஷுரைஹ்,
நூல்: முஸ்லிம் 414
குளிப்பு கடமையானால் இச்சலுகை
இல்லை
குளிப்பு கடமையாகி விட்டால் குளிக்கும் போது காலுறைகளைக் கழற்ற வேண்டும்.
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது உடல் முழுவதும் கழுவி விட்டு காலை மட்டும் கழுவாமல்
காலுறைகள் மீது மஸஹ் செய்தால் கடமையான குளிப்பு நிறைவேறாது.
நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும், உள்ளூரில் இருந்தால்
ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை
எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும் எனவும் நபி (ஸல்) அவர்கள்
எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஃப்வான்
பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: திர்மிதீ
89, நஸயீ 127, இப்னுமாஜா 471, அஹ்மத் 17396
ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo' (1/487), Al-Musannaf (1/209/807)]
ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு நாள் (ஐந்து நேரத் தொழுகைகள்). பிரயாணத்தில் இருப்பவர்களுக்கு மூன்று நாட்கள் ஆகும். [Al-Majmoo' (1/487), Al-Musannaf (1/209/807)]
நபி (ஸல்) அவர்கள் தமது காலுறைகளின் மேற்புறத்தில் மஸஹ் செய்ததை
நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி),
நூல்கள்:
அபூதாவூத் 140, அஹ்மத்
699
நபி (ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தது பற்றி அவர்கள் வழியாக விரிவான
செயல் விளக்கம் நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் காலுறையின் மேற்பரப்பில் மஸஹ் செய்தார்கள்
என்று மட்டுமே கூறப்படுகின்றது. எவ்வாறு என்று விளக்கமாகக் கூறப்படவில்லை.
எனவே தான் ஐந்து விரலால் மஸஹ் செய்ய வேண்டும்; மூன்று விரல்களால்
மஸஹ் செய்ய வேண்டும்; காலுறையின் அதிகமான பகுதிகள் மீது மஸஹ் செய்ய வேண்டும் என்றெல்லாம்
பலவிதமாக அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆயினும் நபி (ஸல்) வழியாக குறிப்பிட்ட
அளவு எதுவும் கூறப்படாததால் மஸஹ்’ என்று சொல்லப்படும் அளவுக்கு காலுறையின் மீது தடவ
வேண்டும் என்று மக்களிடமே அந்த உரிமையை விட்டு விட வேண்டும். இப்படித் தான் செய்ய வேண்டும்
என்று ஒரு குறிப்பிட்ட முறையைத் திணிக்கக் கூடாது.
இது தவிர காலுறைகள் தோல் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் இன்னும்
பல விதிகளைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் ஏதும் இல்லை.
தலைப்பாகையின் மேல் மஸஹ்
செய்தல்
காலுறையின் மேல் மஸஹ் செய்யும் சலுகை போலவே தலைப்பாகை அணிந்தவர்களும்,
தலையை மறைக்கும் துணியை தலையின் மேல் போட்டிருக்கும் ஆண்களும் பெண்களும் தலைக்கு மஸஹ்
செய்வதற்குப் பதிலாக தலைப்பாகையின் மீதும் தலைத் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும் காலுறைகள் மீதும் மஸஹ்
செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின்
உமய்யா (ரலி),
நூல்: புகாரீ 205
தலைப்பாகையின் மேல் மஸஹ் செய்வது போல் தலை முக்காட்டின் மீதும் தலையின்
மேல் போட்டிருக்கும் துணியின் மீதும் மஸஹ் செய்யலாம் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக
அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ்
செய்தனர்.
அறிவிப்பவர்: பிலால்
(ரலி),
நூல்: முஸ்லிம் 413
முக்காடு என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில், கிமார்’ என்ற சொல்
அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ஆண்கள் அணியும் தலைத் துணியையும்,
பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டையும் குறிக்கும். பெண்களின் முக்காட்டைக்
குறிக்க இச்சொல் திருக்குர்ஆனில் 24:31 வசனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள ’குமுரிஹின்ன’ என்பது கிமார்’ என்பதன் பன்மையாகும்.
புகாரீ 5825, 6568, 3321, 3578, 5381, 6688 ஆகிய ஹதீஸ்களிலும் கிமார்’
என்பது பெண்களின் முக்காட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை விரிவாக நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தலைப்பாகை மற்றும் தலைத்
துணியின் மேல் மஸஹ் செய்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது போல் பலரும் எழுதியுள்ளனர்.
பெண்களுக்கும் இந்தச் சலுகை உள்ளது என்று எவரும் கூறியதாகத் தெரியவில்லை.
காலுறைகள் மீது மஸஹ் செய்வது எவ்வாறு ஆண்களுக்கும், பெண்களுக்கும்
உரிய சலுகையோ அது போலவே தலையில் போட்டிருக்கும் முக்காட்டின் மேல் மஸஹ் செய்வதும் இருவருக்கும்
பொதுவானது தான்.
மேலும் தலைப்பாகையை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கழற்ற வேண்டும் என்பதற்கும்
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை. தப்ரானியில் இவ்வாறு ஹதீஸ் உள்ளது. அதை அபூஸலமா என்ற
மர்வான் அறிவிக்கின்றார். இவர் ஏற்கத்தக்கவர் அல்ல என்று புகாரீ, அஹ்மத் பின் ஹம்பல்,
இப்னு அபீஹாத்தம் மற்றும் பலர் கூறுகின்றனர்.
எனவே காலுறைகளுக்குரிய நிபந்தனைகள் ஏதும் தலைப்பாகை மற்றும் முக்காடுகளுக்குக்
கிடையாது. உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும் என்பதை முன்னர்
குறிப்பிட்டுள்ளோம்.
உளூ செய்து முடித்ததும் ஓதக் கூடிய துஆ
அஷ்ஹது அல்லாயிலாஹ
இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹுவஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை;
அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன்.
அல்லது
அஷ்ஹது அல்லாயிலாஹ
இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸூலுஹு.
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று
உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று
நான் உறுதி கூறுகின்றேன்.
உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின்
எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின்
ஆமிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 345, அபூதாவுத்
‘உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: நஸாயீ 148
‘அல்லாஹூம்மஜ்அல்னீ மினத்தவ்வாபீ(B)
வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்’
‘உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு, “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: நஸாயீ 148
உளூ செய்து முடித்ததும் ஓதக் கூடிய மற்றொரு
துஆ
ஷாபி, ஹனபி மத்ஹப் கிதாபுகளிலும், தப்லீக் ஜமாஅத்தினரின் வெளியீடுகளிலும்
ஒவ்வொரு உறுப்பைக் கழுவும் போதும் ஓத வேண்டிய துஆக்கள் என்று சில வாசகங்களை எழுதி வைத்துள்ளனர்.
சிலர் இதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இத்தகைய துஆக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு உறுப்பையும் கழுவும் போது எந்த துஆவையும் ஓதியதில்லை.
எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையின் அடிப்படையிலேயே மேற்கண்ட துஆக்களை
ஓதுகின்றனர். இதை அறவே தவிர்க்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத் தராததை நாமாக ஓதுவது பித்அத்
ஆகும். பித்அத்கள் நரகில் சேர்க்கும் என்பதை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
http://rasminmisc.com/vulu-seyalmurai/
நின்று கொண்டு உளூச் செய்தல்
நின்று கொண்டு உளூச் செய்யக் கூடாது என்று சிலர் கருதுகின்றனர்.
நின்று கொண்டு உளூச் செய்யக் கூடாது என்று குர்ஆனிலோ, அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
வழிகாட்டுதலோ எந்தத் தடையும் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு
உளூச் செய்தார்கள் என்பதற்கு நேரடியான சான்றுகளும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியும், எனது தாயாரின் சகோதரியுமான
மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கினேன். அப்போது தலையணையின் அகல வாக்கில்
நானும் நீள வாக்கில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் படுத்துக்
கொண்டோம்.
பாதி இரவு வரை நபிகள் நாயகம் (ஸல்) உறங்கி விட்டு விழித்தனர். தமது
முகத்தி-ருந்து தூக்க(க் கலக்க)த்தை தம் கையால் தடவி (நீக்கி) விட்டு, ஆலு இம்ரான்
அத்தியாயத்தின் கடைசி பத்து வசனங்களை ஓதினார்கள்.
பின்னர், தொங்க விடப்பட்ட தோளால் ஆன தண்ணீர் பாத்திரத்தின் அருகில்
நின்று அதில் உளூச் செய்தார்கள். பின்னர் எழுந்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்களைப்
போலவே செய்து விட்டு அவர்களின் (இடது) விலாப்புறத்தில் நின்றேன்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தை என் தலை மீது
வைத்து எனது வலது காதைப் பிடித்துத் திருப்பி (வலது பக்கம் நிறுத்தி)னார்கள். இரண்டு
ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள்,
பின்னர் இரண்டு ரக்அத்கள், பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டுப் பின்னர் வித்ரு
தொழுதார்கள்.
பின்னர் முஅத்தின் வரும் வரை ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டனர்.
பின்னர் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு புறப்பட்டுச் சென்று சுப்ஹு
தொழுதார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி - 183, 138, 859, 992, 1198, 4571, 4572
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உளூச் செய்தார்கள் என்று
தெளிவாகவே மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளதால் நின்று கொண்டு உளூச் செய்வதால் எந்தக்
குறைவும் ஏற்படாது என்பதை அறியலாம்.
வீட்டில் உளூச் செய்தல்
வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து
விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால்
அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) உளூச் செய்தார்கள். அதை அழகிய முறையில் செய்தார்கள்.
பின்னர், "யார் இதுபோல் உளூச் செய்து விட்டுப் பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று
இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டு அமர்கின்றாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும்''
என்று கூறினார்கள்.
உஸ்மான் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி புகாரியின் - 6433. வது
ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கருத்து முஸ்லிம் - 340. வது ஹதீஸிலும் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமில் - 336. வது ஹதீஸில் "அவரது தொழுகையும் அவர் நடந்து
சென்றதும் உபரி வணக்கமாக அமையும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
தமது வீட்டில் உளூச் செய்துவிட்டு அல்லாஹ்வுக்கான கடமை(களுள் ஒன்றான தொழுகை)யை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களுள் ஒன்றுக்கு நடந்து செல்பவர் எடுத்து வைக்கும் இரு காலடிகளில் ஒன்று அவருடைய பாவத்தை அழிக்கிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்துகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
தமது வீட்டில் உளூச் செய்துவிட்டு அல்லாஹ்வுக்கான கடமை(களுள் ஒன்றான தொழுகை)யை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களுள் ஒன்றுக்கு நடந்து செல்பவர் எடுத்து வைக்கும் இரு காலடிகளில் ஒன்று அவருடைய பாவத்தை அழிக்கிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்துகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி)
நூல்: முஸ்லிம் 1184
பள்ளிவாசளில் உளூச் செய்ய
ஏற்பாடு செய்தல்
வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது
தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு பள்ளிவாசளின் சார்பில்
வசதிகள் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.
"தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள்
அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயலாமல்
இருந்தது. எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும்
உளூச் செய்தனர்'' என்று அனஸ் (ரலி) கூறினார்கள். "(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?''
என்று அவர்களிடம் நான் கேட்டேன். எண்பது 80 பேர்கள் என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
என்று ஹுமைத் கூறுகின்றார்.
இந்த நிகழ்ச்சி புகாரியின் 3575வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறர் உதவியுடன் உளூச்
செய்தல்
நமது கைகளால் தண்ணீர் எடுத்து உளூச் செய்வது போல் மற்றவர்களை ஊற்றச்
செய்து உளூச் செய்வதற்கும் அனுமதி உள்ளது.
உஸாமா(ரலி) அவர்கள் தண்ணீர் ஊற்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச்
செய்ததாக புகாரியின் - 181, 1670. ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
முகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்கள் தண்ணீர் ஊற்ற நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் உளூச் செய்ததாக புகாரியின் - 182, 203, 363. ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.
எனவே ஒருவர் தண்ணீர் ஊற்ற மற்றவர் உளூச் செய்வதில் எந்தக் குற்றமும்
இல்லை.
செருப்பணிந்து உளூச் செய்தல்
உளூச் செய்யும் போது செருப்பைக் கழற்றி விட வேண்டும் என்றும் செருப்பணிந்து
உளூச் செய்யக் கூடாது என்றும் சிலர் தவறாக எண்ணுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செருப்பணிந்து உளூச் செய்திருக்கின்றார்கள்
என்று அப்துல்லாஹ் பின் உமர் (ர-) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி - 166, 5851.
ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக
உளூச் செய்தல்
உளூச் செய்வதற்காக ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியான இடங்களை
ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில் உளூச் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக
உளூச் செய்து வந்தனர் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இது புகாரியில் - 193.வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த ஹதீஸ் கூறுவது என்னவென்பது மிகத் தெளிவாக இருந்தும் இதற்குப்
பலவிதமான விளக்கங்களை சிலர் கூறி திசை திருப்பியுள்ளனர். இதற்கு வேறு எந்த வியாக்கியானமும்
கொடுக்க முடியாது என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்களும், பெண்களும் ஒரு
பாத்திரத்தில் எங்கள் கைகளைப் பாத்திரத்தினுள் விட்டு உளூச் செய்து வந்தோம் என்று இப்னு
உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூதில் - 73. வது ஹதீஸாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
திர்மிதி - 59, நஸயீ - 341. ஆகிய ஹதீஸ்களிலும், மற்றும் சில ஹதீஸ்களிலும்
பெண்கள் உளூச் செய்து விட்டு, மீதம் வைத்த தண்ணீரில் உளூச் செய்ய நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தடை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸ்களும் நம்பத்தகுந்தவர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளதால்
இதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
முன்னர் இவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டு பின்னர் தடுக்கப்பட்டு விட்டது
என்று சிலர் காரணம் கூறி ஆண்களும், பெண்களும் சேர்ந்து உளூச் செய்யலாம் என்ற ஹதீஸ்
மாற்றப்பட்டு விட்டது என்று கூறுகின்றனர்.
தடை செய்யும் ஹதீஸ்கள் அனுமதிக்கும் ஹதீஸ்களை மாற்றி விட்டது என்று
கூறும் இவர்கள் ஏற்கத் தக்க எந்தக் காரணத்தையும் கூறாமல் இவ்வாறு கூறுகின்றனர். எனவே
இவர்களின் வாதத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.
முதலில் தான் தடை செய்யப்பட்டிருந்தது, பின்னர் அத்தடை நீக்கப்பட்டு
ஒரே இடத்தில் உளூச் செய்ய அனுமதிக்கப் பட்டனர் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்கு ஏற்கத்தக்க காரணத்தையும் கூறுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரே இடத்தில் உளூச் செய்து வந்தோம்
என்ற சொற்றொடர், நபிகள் நாயகம் அவர்களின் இறுதிக் காலம் வரை இதுவே நடைமுறையாக இருந்தது
என்பதையே காட்டுகின்றது.
கடமையான குளிப்பின் போது நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு
பாத்திரத்தில் குளிப்பவர்களாக இருந்தோம் என்று ஆயிஷா (ரலி) கூறுவதும் (புகாரி -
263, 264, 301, 322) இதுவே கடைசி வரை வழக்கமாக இருந்துள்ளது என்ற கருத்தைத் தரும் வகையில்
அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இது முன்னர் அனுமதிக்கப்பட்டு, பின்னர்
தடை செய்யப்பட்டிருந்தால் செய்து வந்தோம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
ஆரம்பத்தில் இவ்வாறு செய்து வந்தோம், பின்னர் தடுக்கப்பட்டு விட்டது
என்று தான் கூறியிருப்பார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலம் வரை
ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் உளூச் செய்யும் வழக்கம் இருந்து வந்தது என்று இவர்கள்
வாதிடுகின்றனர்.
ஏற்கத்தக்க
காரணத்துடன் இவ்வாதம் அமைந்துள்ளதால் இதுவே சரியானதாகத் தெரிகின்றது.
உளுவை முறிக்கும் செயல்கள்
சில செயல்களால் உளு முறிந்து விடும். இவைகளில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விட்டால் மீண்டும் உளு செய்த பிறகே தொழவேண்டும். அவைகள்:
- மல ஜலம் கழித்தல்
- காற்று பிரிதல்
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது வயிற்றுக்குள் இறைச்சலை உணர்ந்து தான் ஹதஸ் ஆகிவிட்டோமா அல்லது ஹதஸ் ஆகவில்லையா என்று சந்தேகம் கொண்டால் அவர் சப்தத்தை கேட்கின்ற வரை அல்லது நாற்றத்தை உணர்கின்ற வரை தொழுகையை முறிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஆதாரம் : அபூதாவுத்
- இச்சை நீர் வெளிப்படல்
- அயர்ந்து தூங்குதல்
- ஒட்டக மாமிசம் உண்ணுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளு செய்ய வேண்டுமா? எனக் கேட்ட போது ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
- ஆட்டிறைச்சி சாப்பிட்டால் உளூ முறியாது
‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்” என மைமூனா(ரலி) அறிவித்தார்
- இன உறுப்பை இச்சையுடன் தொட்டால் உளூ முறிந்து விடும்
உங்களில் ஒருவர் தனது மர்ம பாகத்தைத் தொட்டுவிட்டால் அவசியம் அவர் உளு செய்து கொள்ளவும்.
அறிவிப்பவர்: புஷ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி), ஆதாரம் : அபூதாவூது
- இச்சையில்லாமல் இன உறுப்பை தொட்டால் உளூ முறியாது.
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒரு ஆடவர் தன் ஆண்குறியைத் தொட்டு விடுகிறார். அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேட்டபோது அதுவும் உனது உடலிலுள்ள ஒரு சதைத்துண்டே தவிர வேறில்லை அல்லது உன்னிலுள்ள சதைத்துண்டுதானே! எனக் கூறினர்.
அறிவிப்பவர்: தல்கு பின் அலி (ரலி), ஆதாரம் :இப்னுமாஜா
மேற்கண்ட ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து, ஒருவர் இச்சையோடு மர்ம உறுப்பை தொட்டால் உளு முறிந்து விடும். இச்சையுடன் இல்லாமல் ஏதேச்சையாக தொட்டால் உளூ முறியாது எனவும் மீண்டும் உளு செய்ய வேண்டியதில்லை என்பதையும் அறியலாம்.
தயம்மும்: -
உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
தயம்மும் செய்யும் முறை: -
தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.
********************************************************************
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியதன்
அவசியம்: -
அல்லாஹ்
தன் திருமறையில் கூறுகிறான்: -
அல்லாஹ்வின்
மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன்
33:21)
எனவே
நாம் தொழுகைக்கான உளூ செய்யும் போது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அவ்வாறே
நாமும் செய்ய வேண்டும்.
உளூ செய்யும் முறை
உளூவிற்கான
நிய்யத் செய்தல்: - உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).
‘பிஸ்மில்லாஹ்’
கூறுதல்: - மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ’மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும்.
இரு
மணிக்கட்டுகளை கழுவுதல்: - இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும்.
வாய்
கொப்பளித்தல்: - மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும்.
நாசிக்கு
(மூக்கிற்கு) நீர் செலுத்தி சுத்தம் செய்தல்: - மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி
இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும்.
முகம்
கழுவுதல்: - ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து
கீழ் தாடை வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும்.
இரு
கைகளை முழங்கை வரை கழுவுதல்: - இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட
மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும்.
மஸஹ்
செய்தல்: - இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி
வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால்
காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும். தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும்.
நம்மில்
சிலர் பிடரியில் மஸஹ் செய்கின்றனர். இதற்கு நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
இரு
கால்களையும் கழுவுதல்: - இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில்
முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.
காலுறை
அணிந்தவர் உளூ செய்யும் முறை: - ஒருவர் உளு செய்து விட்டு காலுறை (ஸாக்ஸ்) அணிந்து,
பிறகு உளு முறிந்து விட்டால் திரும்ப உளு செய்யும் போது அவர்; காலுறையை கழற்ற வேண்டிய
அவசியமில்லை. காலை கழுவ வேண்டிய நேரத்தில் காலுறையின் மேல்பகுதியில் மட்டும் மஸஹ் செய்தால்
போதும். கடமையான குளிப்பிற்கு கட்டாயம் கழற்றவேண்டும்.
********************************************************************
No comments:
Post a Comment