Wednesday, July 2, 2014

டி.வி.யில் சினிமா, நாடகம், நாட்டியம்

சினிமா, நாடகங்கள் போன்றவைகளில் ஆபாசமான அருவருக்கத்தக்க ஏராளமான காரியங்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்!
(அல்குர்ஆன் 6:151)

வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருது வதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ் வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான் எனக் கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:33)

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6243)

வெட்கக்கேடான செயல்களைத் தான் முழுக்க முழுக்க சினிமாவும் நாடகங்களும் காட்டுகின்றன. அவற்றை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினால் தான் இறை நினைவுகளில் நாம் இருக்க முடியும். இதில் கொஞ்ச நேரத்தைத் தான் செலவழிக்கிறோம் என்று இறங்கினால் நாம் அதில் மூழ்கி இறுதியில் இறை நினைவை முற்றிலும் இழக்க நேரிடும்.


ஹஜ், உம்ரா போன்ற நற்காரியங்களைச் செய்து பாவக் கறையை நீக்கியவர்கள் மீண்டும் பாவச் சுமையை சுமக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...