பெற்றோரை மதிப்போம்
பெற்றோரின் முக்கியத்துவம்
மனிதனுக்கு அவனது
பெற்றோரைக் குறித்தும் வயுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல்
பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும்,
உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல்
உண்டு.
அல்குர்ஆன் 31:14
பெற்றோருக்கு பணிவிடை
அல்லாஹ்வை வணங்குங்கள்!
அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும்,
அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை
வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை
செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க
மாட்டான்.
அல்குர்ஆன் 4:36
ஜிஹாதை விட சிறந்தது
ஒரு மனிதர் நபி (ஸல்)
அவர்கüடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,
''உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா?'' என்று
கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று
பதிலüத்தார். நபி (ஸல்) அவர்கள், ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை
செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : புகாரி 3004
செயல்களில் சிறந்தது
அவர்கüன் இல்லத்தை நோக்கி
சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த
வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்கüடம்,
''அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள்,
''உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள். ''பிறகு எது?'' என்று
கேட்டேன். ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''பிறகு எது?''
என்றேன். அவர்கள், ''அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்று
பதிலüத்தார்கள். இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால்
எனக்கு இன்னும் அதிகமாக பதிலüத்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி 527
இறை திருப்தியும், கோபமும்
தந்தையின் திருப்தியில்
இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் வெறுப்பில் இறை வெறுப்பு உள்ளது என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : திர்மிதி 1899
சுவர்க்கம் கிடைக்கும்
நபி (ஸல்) அவர்கள்,
''மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு
மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். ''யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?''
என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது
அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும்
பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத்
தான்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி)
முஸ்லிம் 4987
''என்னைத் தவிர வேறு
யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன்
கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை
அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அல்குர்ஆன் 17:23
தந்தையின் நண்பரை..............
அப்துல்லாஹ் பின் உமர் (ரரி)
அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது, அவருக்கு
அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக்
கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க்
கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், ''அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்!
இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து
விடுவார்கள்'' என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரரி) அவர்கள்,
''இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரரி) அவர்களின்
அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நல்லறங்களில் மிகவும்
சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு
பாராட்டுவதாகும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ்
பின் உமர் (ரரி)
நூல் : முஸ்ம் 4989
மரியாதையாக பேசு
''என்னைத் தவிர வேறு
யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன்
கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை
அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே!
மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
அல்குர்ஆன் 17:23
பின்பற்றாதே
உனக்கு அறிவு இல்லாத
ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால்
அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்!
என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல்
என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு
அறிவிப்பேன்.
அல்குர்ஆன் 31:15
இறைவனின் சாபம்
அல்லாஹ் அல்லாதவருக்காக
அறுப்பவரையும், குழப்பம் ஏற்படுத்தக்கூடியவனுக்கு அடைக்கலம் கொடுப்வனையும்,
பெற்றோரை சபிப்பவர்களையம், அடையாளச் சின்னங்களை மாற்றி அமைப்பவர்களையும் அல்லாஹ்
சபிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ இப்னு
அபீதாப் (ரலி)
நூல் : முஸ்லிம்
மீண்டும் மீண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கüடம் ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில்
உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,
''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்)
அவர்கள், ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். ''உன் தாய்''
என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''பிறகு,
உன் தந்தை'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா
(ரலி)
நூல் : புகாரி 5971
அரவணைத்துக் கொள்
நபி (ஸல்) அவர்களுடைய
காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக
இருந்தார்.) நான் நபி (ஸல்) அவர்கüடம் ''(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப்
பேணிக்கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆம்'' என்று
கூறினார்கள். ''ஆகவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, 'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம்
போரிடா மலும், உங்கள் இல்லங்களிரிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்
களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும்
அல்லாஹ் தடுக்கவில்லை. திண்ணமாக அலலாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்' எனும் (60:8ஆவது)
வசனத்தை அல்லாஹ் அருளினான்''
அறிவிப்பவர் : அஸ்மா
பின்த் அபீபக்ர் (ரலி)
நூல் : புகாரி 5978
திட்டாதே
''ஒரு மனிதர் தம் தாய்
தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கüல் உள்ளதாகும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அப்போது ''அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை
எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொரு வரின்
தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார்
(ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்
அறிவிப்பவர் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரரி) புகாரி 5973
பெரும்பாவம்
(ஒரு முறை)
''பெரும் பாவங்கüலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?''
என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ''ஆம், அல்லாஹ்வின்
தூதரே! (அறிவியுங்கள்)'' என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள்,
''அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான்
அவை)'' என்று கூறிவிட்டு, சாய்ந்துகொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து,
''அறிந்துகொள்ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான்'' என்று
கூறினார்கள். 'நிறுத்திக்கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை
(இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா
(ரலி)
நூல் : புகாரி 2654
மரணத்திற்குப் பின்
பெற்றோர்களுக்கு செய்ய வேண்டியவை
மன்னிப்பு கேட்டல்
என் இறைவா! என்னையும்,
என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது
பிரார்த்தனையை ஏற்பாயாக! எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை
கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (எனவும் இப்ராஹீம் கூறினார்)
அல்குர்ஆன் 14:40
'
''என் இறைவா! என்னையும்,
எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை
கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர
வேறு எதையும் அதிகமாக்காதே!'' (எனவும் நூஹ் பிரார்த்தித்தார்)
அல்குர்ஆன் 71:28
பிரார்த்தனை செய்தல்
அன்புடன் பணிவு எனும்
சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை
இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று
கேட்பீராக!
அல்குர்ஆன் 17:24
ஒரு மனிதர்
இறந்துவிட்டால் 1 நிரந்தர தர்மம் 2. பயனுள்ள கல்வி, 3. தனக்காக பிரார்த்தனை
செய்யும் குழந்தை ஆகிய மூன்று விஷயங்களைத் தவிர மற்ற எல்லா நற்காரியங்களும்
துண்டிக்கப்படுகின்றன
நூல் : முஸ்லி ம்
கடனை நிறைவேற்றுதல்
முஃனினுடைய கடன்
அடைக்கப்படும் வரை அவரது ஆன்மா தொங்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :
அபூஹ‚ரைரா (ர) நூல் : திர்மிதி 998
நேர்ச்சையை நிறைவேற்றுதல்
சஅத் பின் உபாதா (ரலி)
அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ''என்
தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமை யாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர்
இறந்து போய் விட்டார் (என்ன செய்வது?)'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள்,
''அவர் சார்பாக நீ அதை நிறைவேற்று'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :
இப்னு அப்பாஸ் (ரலி)
புகாரி 2761
ஹஜ்ஜை நிறைவேற்றுதல்
இப்னு அப்பாஸ் (ரரி)
கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து,
'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக
நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''ஆம்! அவர்
சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்.
எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்
அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு
அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1852
நோன்பு நோற்றல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர்
சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.
அறிவிப்பவர் :
ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1952
தர்மம் செய்தல்
சஅத் பின் உபாதா அவர்கள்
வெüயே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்)
அவர்கüடம், ''அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெüயே சென்றிருந்த போது மரண
மடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தருமம் ஏதும் செய்தால் அது அவருக்குப்
பயனüக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''ஆம் (பயனüக்கும்)'' என்று
பதிலüத்தார்கள். இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், ''நான் எனது மிக்ராஃப் எனும்
தோட்டத்தை என் தாயார் சார்பாக தருமம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சி
யாக்குகிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு
அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 2756
No comments:
Post a Comment