பெருநாள் தொழுகையின் சட்டதிட்டங்கள்
ஷவ்வால் பிறை ஒன்றிலும், துல்ஹஜ் பிறை பத்திலும் ஆக இரண்டு பெருநாள் தொழுகைகளை மார்க்கம் கடமையாக ஆக்கியுள்ளது. இவ்விரண்டும் மிக அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகும். இவ்விரண்டு பெருநாளும் இஸ்லாமிய மக்களுக்கு சந்தோஷமான நாட்களாகும்.
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜப் பெருநாளிலும் கன்னிப் பெண்களையும் வாலிபப் பெண்களையும் பெருநாள் திடலுக்கு புறப்படச் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டவர்கள் (மட்டும்) தொழுமிடத்திலிருந்து விலகி நல்ல காரியத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் அழைப்புப் பணியிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)
நூல் : புகாரி 980
நூல் : புகாரி 980
மாதவிடாய் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து பெருநாள் தொழுகை என்பது மிக முக்கியமானது என்பது தெளிவாகிறது.
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு உண்ணாமல் நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜ‚ப் பெருநாளில் தொழுகைக்கு முன் உண்ணமாட்டார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : திர்மிதி 497
நோன்புப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் காலை உணவாக பேரித்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜ‚ப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிருந்து உண்பார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி 953
ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (986),
பாங்கு, இகாமத், முன் பின் சுன்னத்
பெருநாள் தொழுகைக்கு பாங்கோ, இகாமத்தோ முன்பின் சுன்னத்தோ கிடையாது
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல பலமுறை பெருநாள் தொழுகை தொழுதிருக்கிறேன். அதில் அவர்கள் பாங்கு, இகாமத் கூறியதில்லை.
அறிவிப்பவர் : சமுரா (ரலி) நூல் : திர்மிதி 489
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்கு) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை.
அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (1431),
தொழும் முறை
பெருநாள் தொழுகை ஏனைய தொழுகைகளைப் போன்றே தொழப்பட்டாலும் இந்தத் தொழுகையில் அதிகப்படியாக பன்னிரண்டு தக்பீர்கள் சொல்லப்பட வேண்டும்.
இத்தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் அல்லாஹும்ம பாயித் பைனீ... என்ற துஆவை ஓதிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று ஏழு தடவை இமாம் கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் ஏழு தடவை சப்தமின்றி கூற வேண்டும்.
பின்னர் ஸþரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்கள் ஓதி ருகூவு மற்றும் மற்ற தொழுகையில் செய்வதைப் போன்று ஏனைய காரியங்களைச் செய்ய வேண்டும்.
பின்னர் இரண்டாம் ரக்அத்திற்கு எழுந்தவுடன் ஸþரத்துல் பாத்திஹா ஓதுவதற்கு முன்னர் இமாம் ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் சப்தமின்றி ஐந்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.
பின்னர் மற்றத் தொழுகைகளைப் போல் ஸþரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி தொழுகையை முடிக்க வேண்டும். கூடுதல் தக்பீர் கூறும் போது தக்பீர்களுக்கு இடையில் ஓதுவதற்கு எந்த துஆவையும் நபி (ஸல்) கற்றுத் தரவில்லை. எனவே இடையில் எந்த துஆவும் ஓதக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். இவற்றை கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்கள் : அபூதாவூத் (971), தாரகுத்னீ, பைஹகீ (5968)
ஓத வேண்டிய சூராக்கள்
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் முதல் ரக்அத்தில் அஃலா (87வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் காஷியா (88வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
சில சமயங்களில் காஃப் (50வது) அத்தியாயத்தையும் இரண்டாவது ரக்அத்தில் ஸþரத்துல் கமர் (54வது) அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும் ஜுமுஆத் தொழுகையிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்ற 87 வது அத்தியாயத்தையும்) ஹல் அதாக்க ஹதீஸுல் காஷியா (என்ற 88 வது அத்தியாயத்தையும்) ஓதுபவர்களாக இருந்தார்கள். பெருநாளும் ஜுமுஆவும் ஓரே நாளில் வந்து விட்டால் அப்போது இந்த இரண்டு அத்தியாயங்களை இரண்டு தொழுகையிலும் ஓதுவார்கள்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி),
நூல்கள் : முஸ்லிம் (1452), திர்மிதீ (490)
நூல்கள் : முஸ்லிம் (1452), திர்மிதீ (490)
அபூவாகித் அல்லைஸீ (ர) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் தொழுகையில் என்ன ஓதுவார்கள்? என்று உமர் (ர) அவர்கள் கேட்டபோது அவ்விரு தொழுகையிலும் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்ற 50 வது அத்தியாயத்தையும்) இக்தரபத்திஸ் ஸாஅத்தி வன் ஷக்கல் கமர் (என்ற 54வது அத்தியாயத்தையும்) ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ்,
நூல்கள் : முஸ்லிம் (1477),திர்மிதீ (491),
நூல்கள் : முஸ்லிம் (1477),திர்மிதீ (491),
பெருநாள் தொழுகைக்கு செல்லும் பாதை
பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரீ (986),
முதல் தொழுகையா? உரையா?
முதல் தொழுகை நடத்தப் பட வேண்டும் பின்புதான் உரை நிகழ்த்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையை துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி) நூல் : புகாரி 958
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ர), உமர் (ர) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி 963
எத்தனை குத்பா?
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதல் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவாôகள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன்.
அதற்கு மர்வான் நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது என்றார். நான் விளங்காத (இந்த புதிய) நடைமுறையை விட நான் விளங்கிய வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என நான் கூறினேன்.
அதற்கு மர்வான், மக்கள் தொழகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன் என்று கூறினார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472)
நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472)
மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர், இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை... அபூதாவூத் (963), இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651) ஆகிய நூல்களின் அறிவிப்பில் என்று இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று ஒரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
திடலுக்குச் சென்றதும் ...
இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும், மேலும் திடல் தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடல் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி),
நூல்கள் : புகாரீ (971), முஸ்லிம் (1474)
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
(அல்குர்ஆன் 7:205)
பெருநாளும் ஜ‚ம்ஆவும் ஓரே நாளில் வந்தால்
ஜ‚ம்ஆவும் பெருநாளும் ஓரே நாளில் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாள் வந்துள்ளன. யார் பெருநாள் தொழுகையை தொழுகிறாரோ அவர் ஜ‚ம்ஆ தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜ‚ம்ஆ தொழுகையை நடத்துவோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : அபூதாவூத் 907
No comments:
Post a Comment